எழில் கொஞ்சும் கோழிக்கோடு பல்கலை.யில் படிக்க ஆசையா...!!

Posted By:

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

2016-17-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது. 4 ஆண்டு படிக்கும் பிஎச்எம் (ஹோட்டல் நிர்வாகம்), உடற்கல்வி படிப்பான (பி.பி.எட்) உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.

பட்டப் படிப்பில் சேர பிளஸ் 2 படிப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

எழில் கொஞ்சும் கோழிக்கோடு பல்கலை.யில் படிக்க ஆசையா...!!

பட்டமேற்படிப்புகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனிலும் அனுப்பலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்தினாலே போதுமானது.

ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பிய பிறகு அதை பிரிண்ட் அவுட் எடுத்து தகுந்த ஆவணங்களை இணைத்து, பணம் செலுத்தியதற்கான ரசீதையும் சேர்த்து Chief Co-ordinator, CCSIT Centre, Calicut University Campus,university of Calicut, P O Calicut University-673635 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மே 16-க்குள் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.cuonline.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications are invited by University of Calicut, Malappuram for admission to UG and PG programmes. Admissions are offered in the following programmes for the academic session 2016-17. 4 years Bachelor of Hotel Management (BHM) 4years Integrated Bachelor of Physical Education (B.P.Ed) 2 years BPEd, Master of Computer Applications (MCA) 2 years Master of Social Work (MSW) Master of Communication and Journalism (MCJ) Masters in Science (M.Sc) Master of Hospital Administration (MHA) and Master of Physical Education (MPED) programmes

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia