புள்ளியியலில் பி.எச்டி படிக்க வாய்ப்பு... கொல்கத்தா பல்கலை. அறிமுகம்!!

சென்னை: கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி(புள்ளியியல்) படிப்புக்கான அனுமதி தற்போது தொடங்கியுள்ளது.

இந்தியாவிலுள்ள மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் கொல்கத்தா பல்கலைக்கழகமும் ஒன்று. பழமையான பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் ஏராளமான படிப்புகளை இந்த பல்கலை வழங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.

புள்ளியியலில் பி.எச்டி படிக்க வாய்ப்பு... கொல்கத்தா பல்கலை. அறிமுகம்!!

இந்த நிலையில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறை நடப்புக் கல்வியாண்டுக்கான பி.எச்டி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்தப் படிப்பு பயில மாணவ, மாணவிகள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து எம்.எஸ். புள்ளியியல் படிப்போ அல்லது அதற்கு ஈடான படிப்புகளையோ படித்திருக்கவேண்டும்.

இந்தப் படிப்பு பயில விரும்பும் மாணவ்கள் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் அப்ளை செய்யவேண்டும். மேலும் இதற்காக ரூ.100 விண்ணப்பக் கட்டணத்தை ரொக்கமாகவோ, கேட்புக் காசோலையாகவோ செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் எழுத் தேர்வை எழுதவேண்டும். மேலும் அதன் பிறகு நேர்முகத் தேர்வும் இருக்கும்.

இந்தப் படிப்பை பயில விரும்புபவர்கள் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இதற்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியிடப்படும். நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும்.

இதைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் பட்டியல் செப்டம்பர் 14-ம் தேதி வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் http://www.caluniv.ac.in/ என்ற முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
University of Calcutta (CU), Kolkata has invited applications for admission to Doctor of Philosophy (Ph.D) in Statistics offered at the Department of Statistics. Programme is offered for the session 2015. Eligibility Criteria: Candidates should have passed M.Sc or equivalent degree in Statistics and allied subjects from any recognized university can apply for the programme.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X