மாணவர்களுக்கு குட் நியூஸ்! புதிதாக 6 ஐஐடி தொடங்க மத்திய அரசு பர்மிஷன்!!

Posted By:

சென்னை: புதிதாக 6 ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களை தொடங்கி நடத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடகம், கேரளம், ஆந்திரம், சத்தீஸ்கர், கோவா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் இந்த புதிய ஐஐடி-க்கள் தொடங்கப்படும்.

மாணவர்களுக்கு குட் நியூஸ்! புதிதாக 6 ஐஐடி தொடங்க மத்திய அரசு பர்மிஷன்!!

டெல்லியில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய ஐஐடி கல்வி நிறுவனங்களில் முதலாம் ஆண்டில் 180 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். பின்னர் இரண்டாம் ஆண்டில் இது 450 ஆக உயர்த்தப்படும். 3-ம் ஆண்டில் இது 928-ஆ உயர்த்தப்படும். இந்த புதிய ஐஐடிகளை நடத்த ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு ரூ.1,411.80 கோடி தேவைப்படும்.

இந்த நிதியை அளிப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.

Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia