சிஏ ஐபிசிசி தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

Posted By:

டெல்லி: சிஏ ஐபிசிசி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. இணையதளத்துக்குச் சென்று ஹால் டிக்கெட்டுகளை தேர்வர்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளன.

சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் என அழைக்கப்படும் ஆடிட்டர்களுக்கான இந்த நுழைவுத் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுக மே 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

சிஏ ஐபிசிசி தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://www.icai.nic.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். அங்கு 'IPCC May 2016' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் எந்தத் தேர்வு என்பதைக் கிளிக் செய்து பதிவு எண் அல்லது பார் கோட் எண்களை டைப் செய்யவேண்டும். பின்னர் ரகசிய எண்ணைக் கொடுத்தால் ஹால் டிக்கெட்டுகளை திரையில் தோன்றும். அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு தேர்வுக்குச் செல்லலாம்.

இந்தத் தேர்வை, தி இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது.

English summary
CA IPCC 2016 examination admit cards have been released by the Institute of Chartered Accountants of India on their official website. Candidates who are appearing for the exam have to visit the official website to download the application form. CA IPCC 2016 exams are scheduled to be held from May 3 to May 16, 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia