சிஏ இறுதிதேர்வில் தமிழகத்து மாணவர்கள் கலக்கல் தேர்ச்சி வீகிதம் மற்றும் இரண்டு டாப் ரேங்குகள்

Posted By:

சிஏ இறுதி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 23% சதவிகீத மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் நடைபெற்ற சிஏ தேர்வுக்கான இறுதிதேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் , மாணவி டாப் ரேங்குகள் பெற்று அசத்தியுள்ளனர்

சிஏ தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சிவீகிதம் அதிகரித்து வருவது பெருமைகுரியது

சிஏ தேர்வு முறைகள்:

சார்டடு அக்கவுண்ட் தேர்வில் வெற்றி பெற முதலில் சிஏ தேர்வில் வெற்றி பெற வேண்டும. பொது திறன் தேர்வான சிபிடி நடத்தப்படும் . இரண்டாவதாக தேர்வில் வென்றவர்கள் ஐபிசிசி என்ற ஒருங்கிணைந்த போட்டி தேர்வு எழுத வேண்டும் அத்துடன் ஆடிட்டிங் நிறுவனம் நடத்தும் 3 ஆண்டு தொழிற் பயிற்சி முடிக்க வேண்டும் . இறுதி தேவில் மொத்தம் 8 தாள்கள் எழுத வேண்டும் .

மாணவர்கள் தேர்ச்சி:

மே மாதம் நடைபெற்ற இறுதி தேர்வில் மஹாராஷ்டிராவின் டொம்வாலியை சேர்ந்த ராஜ்பரேஷ் என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார் .
இரண்டாம் இடம் வேலூரை சேர்ந்த மாணவர் அகஸ்த்தீஸ்வரன் 602 மதிபெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார் . மேலும் மும்பையை சேர்ந்த கிருஷ்ணா குப்தா 601 மதிபெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார் . சென்னையை சேர்ந்த கொரட்டூர் மாணவி ஐஸ்வர்யா ஐந்தாம் இடம் பெற்றுள்ளார் .

தமிழகத்தில் மொத்தம் 22.98 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மொத்தம் தேர்வு எழுதிய 10 ஆயிரத்து 276 பேர் சிஏ வாக தகுதி பெற்றுள்ளனர்கள் . இது சிஏ மாணவர்களின் வளர்ச்சியை காட்டுகிறது .தமிழ்கத்தில் சிஏ மாணவர்கள் டாப் ரேங் வருவது அதிகரித்திருப்பது சிஏ பாடம் படிக்கும் ஆர்வம் மற்ற மாணவர்களுக்கும் அதிகரிக்க செய்யும் .

English summary
above article tell about CA students pass result getting increase in Tamilnadu along with top CA ranks

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia