பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து தேடி வரும் வேலைவாய்ப்புகள்!

Posted By:

சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்காக விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது அந்நிறுவனம்.

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம்(பிஎஸ்என்எல்) நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் 400 மேலாண்மை பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை பிஎஸ்என்எல் வரவேற்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து தேடி வரும் வேலைவாய்ப்புகள்!

மொத்தம் 400 பணியடங்கள் காலியாகவுள்ளன. வெளிப்பிரிவு வகையில் டெலிகாம் ஆப்பரேஷன்ஸ் செக்ஷனில் - 150 இடங்களும், டெலிகாம் பைனான்ஸ் பிரிவில் 50 இடங்களும் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு வயது வரம்பு 30-க்குள் இருத்தல் அவசியம்.

உள் பிரிவு வகையில் டெலிகாம் ஆப்பரேஷன்ஸ் பிரிவில் 150 இடங்களும், டெலிகாம் பைனான்ஸ் பிரிவில் 50 இடங்களும் காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு வயது வரம்பு 50-க்கு இருத்தல் வேண்டும்.

ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் ரேடியோ, கணினியியல், ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.பைனான்ஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ, ஐசிடபுள்ஏ, சிஎஸ் போன்ற ஏதாவது பட்டத்தை பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.750-ம் வசூலிக்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்துக்குச் சென்று மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான 07.07.2015 கடைசி தேதியாகும். இதற்கான தேர்வு ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அறிய..

English summary
Bharath Sanjar Nigam Limited (BSNL) will fill up 400 posts of Management Trainee. Suitable person can apply for the abovesaid posts on or before 07-07-2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia