பிரிட்டன் பல்கலை. படிப்புகளை இனி இந்தியாவிலேயே படிக்கலாம்!!

Posted By:

சென்னை: பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புகளை இனி இந்தியாவிலேயே படிக்கலாம். இதற்காக பிரிட்டிஷ் மையம் இந்தியாவில் விரைவில் அமையவுள்ளது.

பிரிட்டிஷ் கல்வி மையம்(பிஇசி) என்ற பெரயிர்ல இந்த மையம் இந்தியாவில் அமையவுள்ளது. தனியார் துறை பங்களிப்புடன் உருவாகும் இந்த மையம் குர்காவ்ன் நகரில் அமைக்கப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பிரிட்டன் பல்கலை. படிப்புகளை இனி இந்தியாவிலேயே படிக்கலாம்!!

இதன்மூலம் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கும் வழங்கும் படிப்புகளை இனி நாம் பிரிட்டன் சென்று படிக்க வேண்டியதில்லை. அவை அனைத்து குர்காவ்ன் மையத்திலேயே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான முன்னாள் பிரிட்டன் தூதர் மார்க் ருனாக்ரஸ் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து பிஇசி மையத்தின் துணை நிறுவனர் சத்பால் தாஸ் கூறியதாவது:

தூதர் மார்க்குடன் இணைந்து இந்த மையத்தைத் தொடங்கவுள்ளோம். ஏராளமான இந்திய மாணவர்கள் பிரிட்டன் சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பயில்கின்றனர். இதற்கு ஏராளமான பணம் செலவாகிறது.

இந்திய மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த மையத்தைத் தொடங்கவுள்ளோம். பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் சிறந்த படிப்புகளை இங்கேயே இனி பயிலலாம்.

பிரிட்டன் சென்று இந்திய மாணவர்கள் பயில வேண்டுமென்றால் ஓராண்டுக்கு ரூ.30 லட்சம் செலவாகும். ஆனால் இங்கு பயிலும்போது அது ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்குள் முடிந்துவிடும் என்றார் அவர்.

English summary
Many students aspire to graduate from a British university but the cost of studying in the UK is a major hurdle towards realising that ambition. To change that, the British Education Centre (BEC), a private initiative backed by the British government, has set up its first facility in India in Gurgaon's Cyber Hub.The BEC aims to make available the best courses offered by universities in the UK - without them having to leave home. With a stricter visa regime, not to mention a decline in the number of students flying to the UK for study, the timing feels just right.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia