சென்னை பெரியார் திடலில் 5வது ஆண்டு புத்தக கண்காட்சி.. 21 முதல்!

Posted By:

சென்னை : சென்னை புத்தக சங்கமம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற 21ம் தேதி புத்தக கண்காட்சி ஆரம்பமாகிறது.

புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 5 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறும்.

சென்னை பெரியார் திடலில் 5வது ஆண்டு புத்தக கண்காட்சி.. 21 முதல்!

இலக்கியம், அறிவியல், விளையாட்டு, பொருளாதாரம், பொழுதுபோக்கு உள்பட அனைத்து தலைப்புகளிலும் முன்னணி பதிப்புகளின் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. அனைத்து துறைச் சார்ந்த புத்தகங்களும் கண்காட்சியில் இடம்பெறும்.

புத்தக கண்காட்சிக்கு அனுமதி இலவசம். கட்டணம் எதுவும் கிடையாது. பார்வையாளர்கள் இலவசமாக புத்தககண்காட்சியினை பார்வையிடலாம்.

புத்தக கண்காட்சியில் அனைத்து புத்தகங்களும் 50% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியும் வாங்கலாம்.

நடமாடும் ஏ.டி.எம் வசதியும் செய்யப்பட இருக்கிறது. பார்வையாளர்கள் நடமாடும் ஏ.டி.எம் வசதியினைப் பயன்படுத்தியும் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.
புத்தக கண்காட்சியில் பதிப்பாளர்களுக்கான பயிலரங்கம் சிறுவர் சிறுமியருக்கான போட்டிகள் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும் உணவுத் திருவிழாவும் நடை பெற உள்ளன. இதில் மாநிலம் முழுவதுமுள்ள வட்டார உணவுகள், நொறுக்குதீனிகளும் கிடைக்கும் வகையில் உணவு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

மேற்கண்ட தகவல்களை சென்னை புத்தக சங்கமம் வெளியிட்டுள்ளது.

புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு 50% தள்ளுபடி விலையில் சிறந்த புத்தகங்களை
வாங்கி மகிழுங்கள். அத்துடன் உணவுத் திருவிழாவிலும் கலந்து கொண்டு விதவிதமான உணவுகளை உண்டு மகிழுங்கள். உங்கள் குழந்தைகளுடன் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

English summary
Chennai Book Confluence will condut Book Fair 2017 at Chennai, periyar thidal April 21 to April 25. No Entrance fees. The visitors canpurchase the books 50% offer by credit card and ATM card.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia