பிலானி பிர்லா இன்ஸ்டிடியூட்டில் எம்.இ., எம்.ஃபார்ம் படிக்கலாமா...!!

Posted By:

டெல்லி: பிலானி நகரிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (பிஐடிஎஸ்) இன்ஸ்டிடியூட்டில் எம்.இ., எம்.ஃபார்ம் படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிலானி, ஹைதராபாத், கோவா நகரிலுள்ள இன்ஸ்டிடியூட் வளாகத்தில் படிப்புகள் படிக்க முடியும்.

பிலானி பிர்லா இன்ஸ்டிடியூட்டில் எம்.இ., எம்.ஃபார்ம் படிக்கலாமா...!!

பயோடெக்னாலஜி, கெமிக்கல் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் எம்.இ படிக்க முடியும்.

படிப்புக்காக ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.2,200 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை அனுப்பிய பிறகு அதை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய ஆவணங்களை இணைத்து 'Dean Admissions, BITS, Pilani, Rajasthan - 333 031 (India)' என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களைத் தேர்வு செய்து நுழைவுத் தேர்வு நடத்தப்படும். தேர்வை பிலானி இன்ஸ்டிடியூட் வளாகம் நடத்தும். விண்ணப்பங்களை மே 19-க்குள் அனுப்பவேண்டும்.

இதற்கான ஹால் டிக்கெட்டுகள் மே 24-ம் தேதி கிடைக்கும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மே 28, 29-ம் தேதிகளில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://www.bits-pilani.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Birla Institute of Technology and Science (BITS), Pilani has invited applications for admission to 2 years Master of Engineering (M.E) and Master of Pharmacy (M.Pharm) with specialisation in Pharmaceutics and Pharmaceutical Chemistry programmes. Admissions are offered at Hyderabad, Goa and Pilani campuses for the academic session 2016.How to Apply? Candidates should visit the official website to apply online An application fee Rs 2,200/- should be paid by the candidates After filling online application form candidates are required to take print outs of the same Candidates must take 2 copies of the printout and have to send one copy of application attested with relevant documents including proof of fee payment Applications can be sent through registered post /speed post to the following address: 'Dean Admissions, BITS, Pilani, Rajasthan - 333 031 (India)'

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia