மெஸ்ரா பிர்லா இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி. படிப்புகள் படிக்கலாமா....!!

Posted By:

டெல்லி: மெஸ்ரா நகரிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில்

எம்.இ, எம்.டெக், எம். பார்ம், எம்.எஸ்சி உள்ளிட்ட படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெஸ்ரா பிர்லா இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி. படிப்புகள் படிக்கலாமா....!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு அருகிலுள்ளது மெஸ்ரா நகரம். இந்த நகரில் அமைந்துள்ள பிர்லா இன்ஸ்டிடியூட்டில் படிப்பதற்கு மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம். 2016-17-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது.

இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பி.இ., பி.டெக், ஏஎம்ஐஇ உள்ளிட்ட படிப்புகளில் ஏதாவது ஒன்று 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பங்களை பிர்லா இன்ஸ்டிடியூட் இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படும், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ரூ.1,500 செலுத்தினால் போதுமானது. விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பிய பிறகு பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான ஆவணங்களை இணைத்து Dean Admissions & Academic Coordination, Birla Institute of Technology, Mesra, Ranchi - 835215 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

கல்வித் தகுதி, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவ, மாணவிகள் இந்த படிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

படிப்புகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

http://115.114.127.54:8080/psc/bitpublic/EMPLOYEE/HRMS/s/WEBLIB_B_LOGIN.EMPLID.FieldFormula.IScript_B_APP_LOGIN?&

English summary
Applications are invited by Birla Institute of Technology (BIT), Mesra for Post Graduation programmes. Candidates will be granted admission in the following programmes: Master of Engineering (M.E), Master of Technology (M.Tech), Master of Pharmacy (M.Pharm) and Master of Science (M.Sc) at Mesra and its Extension Centre, Patna for the session 2016-17. Eligibility Criteria: M.E Programme: Candidates should have completed B.E/ B.Tech/ AMIE or equivalent degree in the relevant discipline with minimum of 55% marks in average (50% for SC/ST). M.Pharm Programme: Candidates must have B.Pharm degree from a PCI and AICTE approved Institute with a minimum of 55% marks in average (50% for SC/ST). M.Tech Programme: Candidates must possess a B.E. / B.Tech/ AMIE/ MCA/ equivalent degree in the appropriate disciplines/ branches for the respective courses with a minimum of 55% marks in average (50% for SC/ST).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia