சென்னை: அறிவியல் துறையில் உயிரோட்டமான பகுதி பயோ டெக்னாலஜி. இது தொடர்பாக பி.எஸ்சியில் 25 வகையான படிப்புகள் உள்ளன.
மருத்துவம், வேளாண்மை, சுற்றுச் சூழல், வேதியியல், பொறியியல், உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் இப்படிப்பின் பயன்பாடு முக்கியமானது.
மனித மரபணுக்களில் இருந்து இன்சுலின் தயாரிப்பது, நானோ டெக்னாலஜி மூலம் ஸ்டெம்செல், மனித உறுப்புகள் மாற்றம் போன்றவற்றிலும் இத்துறை முக்கியத்துவம் வாய்ந்தது.
இதுதொடர்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்ற வாய்ப்புண்டு.
உணவு பதப்படுத்துதல், விவசாய துறையில் அதிக மரபணுக்களை பயன்படுத்தி புதிய ரக தாவரங்கள் கண்டுபிடித்தல், ஆகியவற்றிற்கு இப்படிப்பு உதவுகிறது.
இந்த படிப்புகளால், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டுதுறை, குடிநீர் மற்றும் மணல் அனாலிசிஸ் துறைகளில் அரசு பணியிடங்களில் பொறியாளராக பணியாற்றலாம்.


Click it and Unblock the Notifications












