அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
முன்னதாக ரூ.9 கோடி செலவீட்டில், அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் சிஸ்டத்தினை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்த நிலையில், வரும் ஆகஸ்ட் முதல் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவேடு நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் தாற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
பயோமெட்ரிக் முறையால், இனி அரசுப் பள்ளிகளில் மணி அடித்தார் போல் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும், ஆஜர் ஆகிவிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
English summary
Biometric attendance at schools soon
Story first published: Friday, July 6, 2018, 16:05 [IST]


Click it and Unblock the Notifications












