வேலை வேணுமா..? பெல் நிறுவனத்தில் 770 பணியிடங்கள் உங்களுக்காக வெயிட்டிங்!

Posted By:

சென்னை : திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் 770 டிரேடு அப்ரென்டிஸ் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

வேலை வேணுமா..? பெல் நிறுவனத்தில் 770 பணியிடங்கள் உங்களுக்காக வெயிட்டிங்!

விரிவான விபரங்கள்

பிட்டரில் 236 காலியிடமும், வெல்டரில் 191 காலியிடமும், டர்னரில் 30 காலியிடமும், மெஷினிஸ்டில் 31 காலியிடமும், எலக்ட்ரீசியனில் 63 காலியிடமும், வயர்மேனில் 30 காலியிடமும், எலக்ட்ரானிக் மெக்கானிக்கல் 30 காலியிடமும், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 23 காலியிடமும், ஏ.சி. அண்டு ரெப்ரிஜிரேஷனில் 20 காலியிடமும், மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேனில் 15 காலியிடமும், புரோகிராம் அண்டு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டென்டில் 36 காலியிடமும், போர்ஜர் அண்டு ஹீட் ட்ரீட்டரில் 10 காலியிடமும், கார்பெண்டரில் 26 காலியிடமும், பிளம்பரில் 26 காலியிடமும், எம்.எல்.டி பாதாலஜியில் 3 காலியிடமும் உள்ளது. மொத்தம் 770 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி -

பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ படிப்பில் என்.சி.டி.வி.டி வழங்கும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அடிப்படை தகுதிக்கு மேல் கல்வி பயின்றவர்களும் விருப்பமிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

18 வயது முதல் 27 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் பெல் நிறுவனத்தில் உள்ள மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு www.bheltry.co.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
BHEL Trichy Recruitment 2017 – Apply Online for 770 Trade Apprentice Posts: Bharat Heavy Electrical Limited (BHEL), Tiruchirappalli has published notification for the recruitment of 770 Trade Apprentice vacancies.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia