புதுடெல்லி: பாரத மிகு மின் நிறுவனத்தில் (பிஎச்இஎல்) பழகுநர் (டிரெய்னி) பணியிடங்கள் காத்திருக்கின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.

மொத்தம் 100 டிரெய்னி பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யவர்கள் பிகாம், பிபிஎம், பிஏ, பிஎஸ்சி, பிசிஏ, பிஎஸ்டபிள்யூ உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும்.
சம்பளம் ரூ.7,140 என்ற அளவில் இருக்கும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தகுந்த ஆவணங்களுடன் பிஎச்இஎல் நிறுவனத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி: Sr. Manager (HR-Administration), Bharat Heavy Electricals Limited Electronics Division, Mysore Road, Bangalore - 560 026.
மேலும் விவரங்களுக்கு http://www.bheledn.com/index.php/en/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பங்களை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.


Click it and Unblock the Notifications












