முந்துங்கள்...இன்னும் 6 நாள்கள் மட்டுமே உள்ளன... திருச்சி பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Posted By:

சென்னை: திருச்சியிலுள்ள பாரத மிகு மின் நிறுவனம்(பெல்) ஃபிட்டர், வெல்டர் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளது. விண்ணப்பிக்க 6 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஃபிட்டர் பணிக்கு 150 இடங்களும், வெல்டர் பணிக்கு 50 இடங்களும் காலியாகவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

முந்துங்கள்...இன்னும் 6 நாள்கள் மட்டுமே உள்ளன... திருச்சி பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஃபிட்டர் பணிக்கு மெட்ரிக் அல்லது எஸ்எஸ்எல்சி தேர்ச்சி, ஃபிட்டர் பிரிவில் தேசிய பணி பழகுநர் சான்றிதழ்(என்ஏசி) பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல வெல்டர் மெட்ரிக் அல்லது எஸ்எஸ்எல்சி தேர்ச்சி மற்றும் வெல்டர் பிரிவில் தேசிய பணி பழகுநர் சான்றிதழைப் பெற்றிருக்கவேண்டும்.

வயது 27-க்குள்ளாக இருக்கவேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் http://careers.bhel.in/bhel/jsp/index.jsp என்ற இணையதள முகவரியில் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தபாலில் அனுப்ப விரும்புபவர்கள் Sr. Deputy General Manager/ HR (R&W), HRM Department, Building No 24, Bharat Heavy Electricals Limited, Tiruchirapalli - 620014 என்ற முகவரிக்கு அக்டோபர் 7-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

English summary
Bharat Heavy Electricals Limited (BHEL) invited applications for the post of Fitter and Welder. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 30 September 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia