கலிங்கா நிறுவனத்துக்கு சிறந்த தொழில்நுட்ப பல்கலை விருது!

Posted By:

சென்னை: சிறந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்ற விருதை ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் டெக்னாலஜி(கேஐஐடி) பெற்றுள்ளது.

குஜராத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய 3-வது சிசிஐ டெக்னாலஜி எஜுகேஷன் எக்சலன்ஸ் விருது வழங்கும் விழாவில் இந்த விருதை கேஐஐடி பெற்றுள்ளது.

கலிங்கா நிறுவனத்துக்கு சிறந்த தொழில்நுட்ப பல்கலை விருது!

குஜராத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அக்ஷய் அகர்வால் விருதையளிக்க கேஐஐடி சார்பில் அதன் துணைவேந்தர் பி.பி. மாத்தூர் பெற்றுக்கொண்டார். அகமதாபாத் நகரில் அண்மையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.

குஜராத்தில் நடைபெற்ற கண்கவர் விருது வழங்கும் விழாவிலல் ஏராளமான கல்வியாளர்கள், அறிஞர்கள், நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் பேங்கேற்றனர். இந்தியாவுக்கான நைஜீரியா தூதர் அம்ப் சோலா இனிக்கனோலாயே, இந்தியாவுக்கான லெசோத்தா நாட்டு தூதர் போத்தட்டா சிகோனே, இந்தியாவுக்கான தைவான் நாட்டின் தூதர் சுங் குவாங் டியேன், இந்தியாவுக்கான பொலிவியா தூதர் ஜார்ஜ் கார்டெனஸ் ராபிள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விருது பெற்றது குறித்து கேஐஐடி பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தா கூறியதாவது: இந்த விருதால் கேஐஐடி பல்கலைக்கழகம் மட்டுமல்ல, ஒடிஸா மாநிலமே பெருமை கொள்கிறது. கல்வியின் மூலம் உலகின் எந்த உயரத்தையும் தொட்டு விடலாம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

English summary
KIIT University, Bhubaneswar was awarded "Best Technological University in Eastern India" during the Third CCI Technology Education Excellence Awards 2015 hosted by Gujarat Technological University (GTU), Ahmadabad. The award was received by Prof. P. P. Mathur, Vice Chancellor, KIIT University from Prof (Dr.) Akshai Agrawal, VC, GTU at a glittering ceremony in Gujarat Technological University.Expressing satisfaction over the achievement, Dr. Achyuta Samanta, Founder, KIIT & KISS said, it is a matter of pride not only for KIIT, for also for Odisha. One can touch the entire world through education, he said, adding that high quality of education in KIIT University has given a special identity of Odisha in Eastern Indian as well as in globe.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia