தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக சிறப்பாக செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கௌரவம்

Posted By:

அரசு நடுநிலைப்பள்ளி , மற்றும் தொடக்கப்பள்ளிகளின் சிறப்பான செயல்ப்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக தொடக்க கல்வி இயக்குநர் அவர்கள் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார் .

அரசு தொடக்கப்பள்ளி , நடுநிலைப்பள்ளிகளின் செயல்பாட்டை கணக்கிட்டு கண்காணிக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை தலைவராகவும் ,அவரால் நியமிக்கப்பட்ட அலுவலரை துணை தலைவராகவும், வட்டார பள்ளி கல்வி கண்காணிப்பாளரை கொண்ட குழு உறுப்பினர்களை கொண்ட குழு பள்ளிகளை கண்காணித்து சிறப்பாக செயல்படும்  மூன்று பள்ளிகளை அறிவிக்க ஆணையிட்டுள்ளார் . இவ்வாறு சிறப்பாக செயல்படும் பள்ளிகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்த சுழற்கேடயம் வழங்கப்படும் .

சிறப்பாக செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை பரிந்துரைக்க குழு நியமனம்


ஜூலை 5க்குள் தொடக்க கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியில் சிறந்து விழங்கும் மூன்று  பள்ளிகளை தெரிவிக்க வேண்டும் . ஐந்து விதிமுறைகளுடன் எந்தவித புகார்கள் , குறையுமற்ற பள்ளிகளின் செயல்பாட்டை குறிப்பெடுத்து தரவேண்டும்.
இதன் மூலம் மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கிடையே ஏற்படும் போட்டிகள் கல்வி, ஒழுங்கு மற்றும் மற்ற அடிப்படை வசதிகளுள் ஒழுங்கு ஆகியவற்றை பள்ளிகளுக்கிடையே சிறப்பாக்க முடியும் . மேலும் சுழற்கேடயம் வாங்கும் எண்ணம் அனைத்து பள்ளிகளுக்கும் பெருகும் ஆதலால் பள்ளி கல்வித்தரம் உயரும் எனும் நோக்கில் சிறந்த பள்ளிகளை தேடும் பணி நடக்கின்றது.

சார்ந்த தகவல்கள்: 

அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி, தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு

 

English summary
here article tell about encouraging best government schools of districts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia