வீணாகும் காகிதத்தில் வாழ்த்து அட்டைகளை தயாரிக்கும் பெங்களூரு அரசு பள்ளி மாணவர்கள்!!

சென்னை: வீணாகும் காகிதத்தில் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர் பெங்களூருவைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள்.

பெங்களூரு மாகடி சாலையிலுள்ள போலீஸ் காலணியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 1984-85-ம் ஆண்டில் படித்த மாணவர்கள் கொடுக்கும் கலை என்ற அமைப்பின் மூலம் இதை நடத்தியுள்ளனர்.

வீணாகும் காகிதத்தில் வாழ்த்து அட்டைகளை தயாரிக்கும் பெங்களூரு அரசு பள்ளி மாணவர்கள்!!

 

இதன்மூலம் பல்வேறு நற்காரியங்களைச் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரு பசவேஸ்வரநகர் சானகுருவனஹள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வீணாகும் காகிதங்களிலிருந்து வாழ்த்து அட்டையைத் தயாரிக்கும் பயிற்சியை கொடுக்கும் கலை அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அளித்தனர்.

மேலும் வீணாகும் காகிதத்தில் இருந்து குப்பைக் கூடைகளை தயாரிக்கும் பயிற்சியையும் அந்த மாணவர்களுக்கு அளித்தனர்.

வீணாகும் காகிதத்தில் வாழ்த்து அட்டைகளை தயாரிக்கும் பெங்களூரு அரசு பள்ளி மாணவர்கள்!!

இந்தப் பயிற்சியைப் பெற்றதன் மூலம் மாணவர்கள் வெகுவாகப் பயன் அடைவர் என்று பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்தார்.

இந்தக் கொடுக்கும் கலை அமைப்பைத் தொடங்கியது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் அச்சுதா சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

வீணாகும் காகிதத்தில் வாழ்த்து அட்டைகளை தயாரிக்கும் பெங்களூரு அரசு பள்ளி மாணவர்கள்!!

இதன்மூலம் பெங்களூர் பசவேஸ்வர நகர் பள்ளி மாணவர்கள் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டு சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது என்று பள்ளி ஆசிரியர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  As the New Year is round the corner, it is a common practice to wish each other with a greeting card. So, how about a card which doesn't even waste paper! We mean the greeting cards made purely out of recycled/waste paper. Well, the idea sounds interesting! Students studying at the Government School, Saneguravanahalli (Basaveshwaranagar) created special greeting cards (using waste/recycled paper) within a span of few hours on Saturday. For the first time in Bengaluru, the 1984-85 batch of Government High School Police Colony (GHSPC), Magadi road, kick-started a unique programme under ART OF GIVING theme-"Learn a skill, Gain a Career."
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more