பெங்களூரில் களை கட்டிய கேஐஐடி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!!

Posted By:

சென்னை: ஐ.டி. தொழில்களின் தலைநகரமான பெங்களூருவில் 6-வது கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

300 மாணவர்கள்

300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டதால் நிகழ்ச்சி களைகட்டியது.

புவனேஸ்வரில்....

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கேஐஐடி நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் ஏராளமான பெங்களூரு மாணவர்கள் படித்து முடித்து தற்போது நல்ல வேலைகளில் உள்ளனர்.

ஆண்டுதோறும் சந்திப்பு

இந்த பல்கலைக்கழகதத்தில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இந்த சந்திப்பு நிகழ்ச்சி பெங்களூரில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

அச்சுதா சமந்தா

300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் அச்சுதா சமந்தா பங்கேற்று மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

தொழில்முனைவோர்

கேஐஐடி-யில் படிப்பு முடித்தவர்கள் தற்போது பல்வேறு நிறுவனங்கள் வேலையில் உள்ளனர். பலர் சொந்தமாக தொழில்தொடங்கி தொழில்முனைவோராக மாறியுள்ளனர்.

கேப்தேகோ டாட். காம்

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர் ஒருவர் cabdekho.com (கேப்தேகோ டாட் காம்) என்ற டாட்.காம் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். குறைந்த கட்டணத்தில் வாடகைக் கார்களை புக் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

அனுபவங்கள்

இதேபோல அங்கு வந்திருந்த முன்னாள் மாணவர்கள் தங்களது தொழில் அனுபவங்கள், தொழில் தொடங்கி அதில் வெற்றி கண்ட அனுபவங்கள் குறித்து விவரித்தனர்.

English summary
It was a special Sunday in Bengaluru with 300 people celebrating 'home coming' as they got a chance to recreate campus ambience by meeting up old friends and reminiscing college years. With this, the Bhubaneswar-based Kalinga Institute of Industrial Training (KIIT), a deemed university, has now joined the league of IITs and IIMs to have a pan-India alumni network. Most of the students who had successfully passed out of KIIT recently had turned up for the alumni meet as successful entrepreneurs. The alumni meet was not just sharing old memories but also looking at how the Kalinga campus had empowered them to stand on their feet and create a name for themselves in Bengaluru, India's Silicon Valley of India. The alumni meet held at Novatel Hotel on Sunday, is the sixth such meet in Bengaluru.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia