கேஐஐடி பல்கலை. நடத்திய அழகிப் போட்டியில் பெங்களூரு சிறுமி முதலிடம்!

Posted By:

சென்னை: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) பல்கலைக்கழகம் நடத்திய அழகிப் போட்டியில் பெங்களூரு சிறுமி முதலிடம் பெற்றார்.

கேஐஐடி பல்கலைக்கழகம் நான்ஹிபாரி-லிட்டில் மிஸ் இந்தியா 2015 என்ற பெயரில் அழகிப் போட்டியை அண்மையில் நடத்தியது.

கேஐஐடி பல்கலை. நடத்திய அழகிப் போட்டியில் பெங்களூரு சிறுமி முதலிடம்!

இதில் பெங்களூரு ஆர்மி பப்ளிக் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் சிறுமி இஷானி மித்ரா முதலிடம் பெற்றார். நடனக் கலைஞரான இஷானி, தற்போது ஒடிஸி நடனத்தையும் கற்று வருகிறார்.

முதலிடம் பிடித்த இஷானி கேஐஐடி பல்கலை. வேந்தரும் நிறுவனருமான டாக்டர் அச்சுதா சமந்தா பாராட்டு தெரிவித்தார். மேலும் ரூ3 லட்சம் ரொக்கப் பரிசையும் வழங்கினார். இந்தத் தொகை இஷானியின் மேற்படிப்புக்கு செலவிடப்படும் எனறார் அச்சுதா சமந்தா.

கேஐஐடி பல்கலை. நடத்திய அழகிப் போட்டியில் பெங்களூரு சிறுமி முதலிடம்!

இந்தப் போட்டியில் 13-16 வயதுள்ள 30 சிறுமிகள் கலந்துகொண்டனர். கௌஹாத்தி, கொல்கத்தா, பாட்னா, புவனேஸ்வர், மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் நகரத்தைச் சேர்ந்த சிறுமிகள் கலந்துகொண்டனர்.

2-வது இடத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்வப்னா பிரியதர்ஷினி, 3-வது இடத்தைப் பிடித்த ஒடிஸாவைச் சேர்ந்த பூமிகா தாஷ் ஆகியோர் பெற்றனர்.

English summary
Eshaani Mitra, a class eight student from Army Public School is now the teen beauty queen of India. She was crowned the prestigious KIIT Nanhipari- Little Miss India 2015 at a glittering event held in Bhubaneswar on Tuesday night. Eeshani who is well versed in dancing and currently undergoing training in Odissi dance form has interests in singing and sketching. Her father Sujoy Mitra, who works as a doctor in Indian army said that this was the first time; Eeshani was participating in a pan-India beauty pageant and was happy with her performance. Congratulating Eeshani, KIIT and KISS founder Dr Achyuta Samanta said that she had been awarded a cash prize of Rs 3 lakh and the institute will provide all help in her future studies.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia