பாரத் எர்த்மூவர்ஸ் நிறுவனத்தில் பொறுப்பான வேலை காத்திருக்கு!

Posted By:

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த்மூவர்ஸ் நிறுவனத்தில் (பெமல்) பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளள்ளது.

உதவி மேலாளர், அதிகாரிகள், உதவி அதிகாரி, லேப் டெக்னீஷியன், அலுவலக உதவியாளர், ஐடிஐ முடித்தவர்கள் என பல பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

பாரத் எர்த்மூவர்ஸ் நிறுவனத்தில் பொறுப்பான வேலை காத்திருக்கு!

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் செப்டம்பர் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 43 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை Asst. General Manager (HR), Recruitment Cell, BEML Soudha, No.23/1, 4th Main Road, S.R Nagar, Bangalore -560027 என்ற முகவரிக்கு செப்டம்பர் 23-க்குள் அனுப்பவேண்டும்.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த பாரத் எர்த்மூவர்ஸ் நிறுவனம் மண்வாரி இயந்திரங்கள், ரயில் பெட்டிகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து அளிக்கிறது. ராணுவத்துக்குத் தேவையான பல தளவாடங்களை உற்பத்தி செய்து வருகிறது இந்த பொதுத் துறை நிறுவனம். மெட்ரோ ரயில்களுக்கு பெட்டிகளையும் தயாரித்துத் தருகிறது இந்த நிறுவனம். பெங்களூரு, மைசூரு, கோலார் தங்கவயலில் பெரிய தொழிற்சாலைகளை அமைத்துள்ளது இந்த நிறுவனம்.

பணியிட வாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு http://www.bemlindia.com/jobs.php என்ற இணையதல லிங்கைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Bharat Earth Movers Limited (BEML) invited applications for the posts of Asst. Manager, Officer, Assistant Officer, Lab Technician Trainees, Office Assistant Trainees and ITI Trainees. The eligible candidates can apply to the post through the prescribed format along with other necessary documents on or before 23 September 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia