பெல் நிறுவனத்தில் பணியாற்ற அழைப்பு

Posted By:

சென்னை: பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) என்ஜினீயரிங் அசிஸ்டெண்ட் டிரைனி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும், திறமையும் வாய்ந்த நபர்களிடமிருந்து இந்தப் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை ஜனவரி 23-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமானது மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. பெல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 9 தொழிற்சாலைகள் உள்ளன. இந்திய பாதுகாப்புத் துறைக்குத் தேவையான நவீன எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரித்து அளிக்கிறது பெல்.

பெல் நிறுவனத்தில் பணியாற்ற அழைப்பு

இந்த நிறுவனத்தில் என்ஜினீயரிங் அசிஸ்டெண்ட் டிரைனி பதவிக்கு 14 இடங்களும், டெக்னீஷியன் பிரிவில் 15 இடங்களும், கிளார்க் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணிக்கு 3 இடங்களும் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பங்கலை ஜனவரி 23-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: Deputy Manager (HR/Central), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru 560 013.

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300. பணியிடங்களுக்கான அட்மிட் கார்டுகள் பெல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bel-india.com-ல் காணலாம்.

English summary
Bharat Electronics Limited (BEL) invited applications for 32 Engineering Assistant Trainee & Other Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 23 January 2016. Bharat Electronics Limited Vacancy Details Total Number of Posts: 32 Engineering Assistant Trainee: 14 Technician 'C': 15 Clerk-cum-Comp Operator-C: 03 Eligibility Criteria for Engineering Assistant Trainee & Other Posts Bharat Electronics Limited is an Indian state-owned aerospace and defence company with about nine factories, and few regional offices in India. It is owned by the Indian Government and primarily manufactures advanced electronic products for the Indian Armed Forces. BEL is one of nine PSUs under the Ministry of Defence of India. It has been accorded Navratna status by the Government of India. As of 1 April 2012, BEL's order book is estimated to be around ₹257 billion (US$3.8 billion).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia