பெல் நிறுவனத்தில் நல்ல வேலை காத்திருக்கு!

Posted By:

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) துணை என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்கள் காத்திருக்கின்றன.

இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் 2016-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மத்திய பாதுகாப்புத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது பெல் நிறுவனம். இதன் தலைமையகம் பெங்களூரில் அமைந்துள்ளது. நாடு முழுவதும் 9 தொழிற்சாலைகளையும், பல்வேறு இடங்களில் அலுவலகங்களையும் கொண்டுள்ளது.

பெல் நிறுவனத்தில் நல்ல வேலை காத்திருக்கு!

துணை என்ஜினீயர்(மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், சிவில், எலக்ட்ரிக்கல்), சீனியர் என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஓபிசி பிரிவினருக்கு இந்த விண்ணப்பங்கள் ரூ.500-க்குக் கிடைக்கும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாதும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை உள்ளிட்ட பல்வேறு விவரங்களுக்கு பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான bel-india.com -ல் காணலாம்.

English summary
Bharat Electronics Limited (BEL) invited applications for 12 Deputy Engineer & Other Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 13 January 2016. How to Apply? Eligible candidates can apply to the post through the prescribed format and send the applications along with other necessary documents so as to reach on or before 13 January 2016. Application Fees OBC : Rs 500 SC/ST/PWD candidates

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia