பிஆர்க் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும்

Posted By:

பிஆர்க் கட்டட பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு புதிய அறிவிப்பாக அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வை எழுத வேண்டும் . பிஆர்க் பொறியியல் படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு நாட்டா தகுதி தேர்வில் வென்றவர்கள் போக மீதமுள்ள மாணவர்கள் ஜேஇஇ தேர்வை எழுதியோரும் பிஆர்க் படிப்பில் சேரலாம் என்று அறிவிப்பு வந்தது.

பிஆர்க் மாணவர்கள் தகுதி தேர்வு நாட்டா தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கான அறிவிப்பு

 


 தமிழ்நாட்டில் பிஆர்க் படிப்பில் சேர அமைச்சர் அன்பழகனிடம் ஜேஇஇ தேர்வு தகுதி கேட்டபோது அவர் அளித்த பதிலானது நாடா தேர்வு எழுதியோர் அதிக அளவில் வெற்றி பெறவில்லை ஆதலால் தமிழ்நாட்டில் பிஆர்க் படிப்புக்கு அண்ணா பல்கலைகழகம் நடத்தும் தனி தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

அண்ணா பல்கலைகழகம் இனி நடத்தும் பிஆர்க் சேர்க்கைகான தேர்வை எழுத வேண்டும் . அத்தேர்வை எழுதிபின் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் . இந்நிலையில் பிஆர்க் கவுன்சிலிங் ஆகஸ்ட் 19ல் தொடங்க அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்து மாணவர்கள் அண்ணா பல்கலைகழக தேர்வுக்கு தயாராக வேண்டும் . கவுன்சிலிங் நடக்கும் முன்பு மாணவர்களுக்கான தேர்வு நடக்கும்.

பிஆர்க் மாணவர்கள் இந்தாண்டு நாட்டா முடிந்தது முதல் கலந்தாய்வு சிக்கலில் இருந்தனர். தமிழக அரசின் ஜேஇஇ தகுதி தேர்வை புறக்கணித்தாதால் மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் பிஆர்க் படிப்பில் சேர்ந்துகொள்ள அண்ணா பல்கலைகழகம் அறிவுறுத்தியது, ஆனால் ரூபாய் ஐந்து லட்சம் கொடுத்து இணைய பெற்றோர்கள் மாணவர்கள் விரும்பவில்லை . ஆகவே இதற்கு தீர்வு வேண்டி கோரிக்கை விடுத்தனர் . இதனையடுத்து அரசு அறிவிப்பில் அண்ணா பல்கலைகழகம் நடத்தும் தேர்வு எழுதி மாணவர்கள் பிஆர்க் படிப்பில் சேரலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார் . இதனையடுத்து மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி பிஆர்க் படிப்பில் சேர வேண்டும் . இதுகுறித்து அரசு திறம்பட செயல் பட வேண்டும் . மாணவர்கள் நீட் தேர்வு பரபரப்பில் ஏற்கனவே மனஉலைச்சலில் இருக்கையில் பிஆர்க் மற்றும் மருத்துவ பொறியியல் மாணவர்கள் கல்வி தொடக்க ஆண்டு பல அறிவிப்புகளையும் சோதனைகளையும் கடக்க வேண்டியுள்ளது.

சார்ந்த தகவல்கள் :

பிஆர்கிடெக்சர் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜேஇஇ தேர்வு இணைக்க பெற்றோர்கள் கோரிக்கை

பிஆர்க் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் ஜேஇஇ புறக்கணிப்பட்டுள்ளது

பிஆர்க் படிப்புகளளுக்கான சேர்க்கை விவரங்கள் அண்ணா பல்கலைகழகம் வெளியீடு

 

 

English summary
barc students have to clear anna university entrance

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia