பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அரியர்ஸ் இல்லாத பிஇ படிப்புகள்

Posted By:

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் புதிய பாடத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது . அரியர்ஸ் இல்லாத இன்ஜினியரிங் நியனித்து பார்க்க முடியாத மாற்றம் .

பிஇ படிக்க் போகும் மாணவர்கள் அரியர்ஸ் இல்லாத  படிப்பை படிக்கலாம்


இனிமேல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு 2விருப்ப பாடங்களை படிக்க வேண்டும் . அதாவது மெக்கானிக்கல் படிக்கும் மாணவர்கள் கணினித்துறையை படிக்க வேண்டும் . மேலும் அரியர்ஸ் இல்லாத தேர்வு முறை அண்ணா பல்கலைகழகம் கொண்டு வந்துள்ளது . இந்தாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 518 கல்லுரிகளிலும் இந்த முறை நடைமுறைப் படுத்தப்படும் .

இன்ஜினயரிங் கல்லுரிகளில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றுதல் கொண்டு வரப்படும் . தமிழ்நாட்டில் 2013 ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு புதிய பாடத்திட்டங்கள் குறித்து நடந்த கூட்டத்தில் உயர் கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் , தமிழ் நாடு தொழில் நுட்ப குழு தலைவர் ராஜ ரத்னா போன்றோர் கலந்துகொண்டனர் .

கல்விகுழு கூட்டத்திற்கு பின்பு கிடைத்த தகவலின்படி மாணவர்கள் தாங்கள் விரும்பும் இரண்டு புதிய படிப்புகளை படிக்க வேண்டும். உதாரணமாக மெக்கானிக்கல் பிரிவை படிக்கும் மாணவர்கள் கணினி பொறியியல் படிக்கலாம் . மூன்றாம் ஆண்டு படிக்கும் 8.5 மதிபெண் பெற்ற மாணவர்கள் இறுதியாண்டு கல்லுரி வர முடியாவிட்டால் ஐந்தாமாண்டு கல்லுரியில் நான்காம் ஆண்டு படிப்பு தொடரலாம் .
இனிமேல் அரியர் எனும் பேச்சுக்கே இடமில்லை ஆகவே மாணவர்கள் பருவ தேர்வில் வெற்றி பெறவில்லையெனில் அவர்களுடைய இன்டெர்னல் மதிபெண் இரத்தாகிவிடும் . திரும்ப தேர்ச்சி பெறாத பாடத்திற்குரிய பருவத்தேர்வை ஏழாண்டுக்குள் எழுதலாம். அரியர்ஸ் வார்த்தை ஒழிக்கப்படுகிறது .

வேலைவாய்ப்பு பெறும் நோக்கத்தோடு மாணவர்களுக்கான கல்வித்திட்டம் மாற்றப்படுகிறது .100 மதிபெண் பெற்றால் மிக்ச் சிறப்பு, 10 கிரேடு புள்ளிகள் அத்துடன்90 முதல் 100 மதிபெண்கள் பெற்றால் 'ஏ' பிளஸ் என்று 9 கிரேடு குறிப்பிடப்படும். 80 முதல் 90 மதிபெண் பெற்றால் ஏ என்று குறிப்பிடப்படும் 8 கிரேடு புள்ளிகள் 71முதல் 80 மதிபெண் பெற்றால் பி பிளஸ் 7 கிரேடு 60 முதல் 71 வரையுள்ளவர்கள் பி கிரேடு என அழைக்கப்படுவார்கள் . 50 முதல் 60 மதிபெண் பெற்றவர்கள் திரும்பவும் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது .

 

 

சார்ந்த பதிவுகள் :

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு... அண்ணா பல்கலை அறிவிப்பு 

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 23ல் தொடங்குகிறது 

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை ஐஐடியை போல ஆன்லைனில் கொண்டுவரும் நடவடிக்கைகள்

English summary
above article tell about be new syllabus and without arrears

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia