கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலை.யில் பொறியியல் கவுன்சிலிங் தொடக்கம்

Posted By:

சென்னை: புகழ்பெற்ற கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் கோலாகலமாகத் தொடங்கியது.

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கவுன்சிலிங் திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. தஞ்சாவூர் மற்றும் கும்பகோணங்களில் சாஸ்த்ரா பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலை.யில் பொறியியல் கவுன்சிலிங் தொடக்கம்

நன்கொடை, கேப்பிடேஷன் கட்டணம் எதையும் பொறாமல் திறமை ஒன்றுக்கு மட்டுமே மதிப்பளித்து படிப்புகளை வழங்கி வருகிறது சாஸ்த்ரா.

நேற்று கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சீனிவாச ராமானுஜன் மையத்தில், பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்கியது.

அதில் இளங்கலை பொறியியல் (பி.டெக்) படிப்புகளான மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் மற்றும் கணினிப்பொறியியல் ஆகிய மூன்று பிரிவுகளுக்கான கவுன்சிலிங் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம்,பீகார், புதுடெல்லி மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து 1475 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

கவுன்சிலிங்கில் இடஒதுக்கீட்டிற்கான முதல் கடிதத்தை ஆந்திர மாநிலம் மதனபள்ளி காசலா ஆசிப் என்ற மாணவருக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழக நிதிசார் ஆராய்ச்சிப்புலத் தலைவர் முனைவர் எஸ். சுவாமிநாதன் வழங்கினார்.

காசலா ஆசிப் 98 சதவீதம் மதிப்பெண் பெற்று கவுன்சிலிங் தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்தார். 2-வது ஒதுக்கீடு விஜயவாடாவைச் சேர்ந்த பிரவீண்குமார் நெட்டிக்கும் அவரை தொடர்ந்து நெல்லூர் சாகம் யோகேஸ்வருக்கு 3-வது கடிதமும் அளிக்கப்பட்டது.

கலந்தாய்வில் அகில இந்திய தரவரிசை பட்டியலுடன், தமிழ்நாடு, தஞ்சாவூர் மற்றும் தஞ்சையைச் சுற்றியுள்ள பிற மாவட்டங்களுக்கும் தனி ஒதுக்கீடு செய்யப்பட்டு இட ஒதுக்கீடு நடைபெற்றது.

சமீபத்தில் தேசிய மதிப்பீடு மற்றும் தரம் வழங்கும் கவுன்சில் (என்ஏசிசி) சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு 3.54 மற்றும் ஏ தரம் வழங்கியதில் தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் எல்லா தனியார் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களையும்விட சாஸ்த்ரா முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கவுன்சிலிங்குக்கான ஏற்பாடுகளை, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். சேதுராமன் வழிகாட்டுதலின்படி, சீனிவாசராமானுஜன் மைய புலத் தலைவர் ரகுநாதன், நிர்வாக அலுவலர் ராஜகோபாலன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

English summary
Counselling for admissions into the BE programmes offered by SASTRA University, Kumbakonam commenced on yesterday.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia