அண்ணா பல்கலைகழகத்தின் அறிவிப்புபடி செப்டம்பர் 3 பொறியியல் வகுப்புகள் தொடங்குகின்றன

Posted By:

இன்ஜினியரிங் கல்லுரிகளில் கவுன்சிலிங் தாமதமானதால் விடுமுறை நாட்களிலும் கல்லுரி வேலை நாட்கள் வைக்க அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது .

 செப்டம்பர் 3 இல் பொறியியல் வகுப்புகள் தொடங்குகிறது  சனிகிழமையும் பொறியியல் வகுப்புகள் நடத்த திட்டம்

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு பிரச்சனையடுத்து மருத்துவ கவுன்சிலிங் தாமதமாகின்றது . இந்நிலையில் பொறியியல் கவுன்சிலிங் தாமதமாக தொடங்கியுள்ளது பொறியியல் கவுன்சிலிங்க் ஆகஸ்ட் 25க்குள் முடிக்க அண்ணா பல்கலைகழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் பருவ வகுப்புகள் 75 நாட்களில் முடிக்க வேண்டும் ஆனால் தாமதமாக தொடங்கும் பொறியியல் வகுப்புகள் செப் 3 இல தொடங்குவதால் வேலைநாட்கள் குறையும் அதனை ஈடுகட்ட சனிகிழமைகளிலும் வகுப்புகள் வைத்து சரி செய்ய அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தின் விதிகள் படி ஒரு செமஸ்டருக்கு 75 நாட்கள் 15 நாட்கள் தேர்வு என மொத்த வகுப்பும் 90 நாட்கள் நடக்க வேண்டும். மாணவர்கள் பல்கலைகழக செமஸ்டர் அட்டவணை பின்ப்பற்றப்பட வேண்டும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது .
மாணவர்களும் நீட் தேர்வு உள்ளிட்ட பல சிக்கல்களை கடந்து பொறியியலாவது படிக்கலாம் என இணைந்த மாணவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும் . மேலும் இந்தாண்டு அண்ணா பல்கலை கழகத்தின் தேர்வு குறித்து முன்கூட்டியே அட்டணை வெளியிட்டுள்ளது மாணவர்களுக்கும் திட்டமிட்டு கல்வி பயில ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது .

சார்ந்த பதிவுகள் :

இன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது .கல்லுரிகளின் தரவரிசை விரைவில் வெளியிடப்படும்

மாணவர்களே !! அண்ணா பல்கலைகழகத்தின் பருவகால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

English summary
here article tell about engineering counselling end and classes of first semester day

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia