பிஆர்க் சேர்க்கைக்கான தேர்வு எழுத மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Posted By:

பி ஆர்க் தேர்வு எழுத அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது . பிஆர்க் படிப்புக்கு நுண்ணறி நுழைவு தேர்வு தமிழகத்தில் முதன் முதலாக ஆகஸ்ட் 12ஆம் நாள் நடத்தப்படுகிறது. பிஆர்க் படிப்புகளுக்கான தேர்வு இந்தாண்டு முதல் நடத்தப்படுகிறது.

பி ஆர்க் படிப்புக்கான அண்ணா பல்கலைகழகம் நடத்தும் தேர்வு ஆகஸ்ட் 12இல் நடைபெறும்

தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்க்கான ஆன்லைன் பதிவு ஜூலை 24 ஆம் நாள் தொடங்குகிறது. மாணவர்கள் பி ஆர்க் படிப்பில் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் நாடா தேர்வின்படி சேர்க்கை நடைபெரும் ஆனால் இந்தாண்டு தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட மாணவ சேர்கை எண்ணிக்கையை காட்டிலும் நாடா தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவு இதனையடுத்து மாணவர் சேர்க்கைக்கு இந்திய கட்டிடக்கலை கவுன்சிலின் அங்கிகாரம் பெற்று முதன் முதலாக தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகம் தேர்வு நடத்தவுள்ளது.

பி ஆர்க் படிப்புக்கான அண்ணா பல்கலைகழகம் நடத்தும் தேர்வு ஆகஸ்ட் 12இல் நடைபெறும்

அண்ணா பல்கலைகழகம்  முதன் முதலாக நடத்தும் பி ஆர்க் நுழைவுத் தேர்வில் பங்கேற்க இன்று முதல் விண்ணபிக்கலாம் ஆகஸ்ட் 12 ஆம் நாள் தேர்வு தொடங்குகிறது. ஆகஸ்ட் 7 ஆம் நாள் தேர்வுக்கான அட்மிட்கார்டு பெற்று கொள்ளலாம்.ஆகஸ்ட் 31 ஆம் நாள் தேர்வு எழுத விண்ணப்பிக்க இறுதிநாள் ஆகும். ஆகஸ்ட் 18 ஆம் நாள் மதிபெண் வெளியிடப்படும் மற்றும் ஆகஸ்ட் 19ஆம் நாள் மதிபெண் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அண்ணா பல்கலைகழகம் நடத்தும் பி ஆர்க் தேர்வுக்கான கட்டணம் ரூபாய் 2000 ஆகும் . எஸ்சி, எஸ்,டி பிரிவினருக்கான தேர்வு கட்டணம் ரூபாய் 1000 ஆகும் .

பி ஆர்க் படிக்கும் மாணவர்கள் சிக்கல் இத்தேர்வு அறிவிப்புகள் மூலமாக முடிவுக்கு வரும் என நம்பபடுகிறது . நீட் தேர்வு முடிந்தது முதல் கவுன்சிலிங் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அன்று முதல் பி ஆர்க் தொடர்பான கவுன்சிலிங், நாடா தேர்வு , நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என வெவ்வேறு நிலைளையும் சிக்கல்களையும் கடந்து இன்று தேர்வு மூலம் பி ஆர்க் படிப்புகளுக்கான சிக்கல்கள் அண்ணா பல்கலை கழகத்தேர்வு மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பி ஆர்க் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த பதிவுகள் : 

பிஆர்க் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும் 

 பிஆர்கிடெக்சர் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜேஇஇ தேர்வு இணைக்க பெற்றோர்கள் கோரிக்கை

 பிஆர்க் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் ஜேஇஇ புறக்கணிப்பட்டுள்ளது

English summary
above article tell about barc entrance for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia