பிஆர்கிடெக்சர் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜேஇஇ தேர்வு இணைக்க பெற்றோர்கள் கோரிக்கை

Posted By:

பிஆர்கிடெக்சர் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஜேஇஇ தேர்வை பிஆர்க் சேர்க்கையில் சேர்க்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு ஜேஇஇ தேர்வை பிஆர்கிடெக்சர் சேர்க்கைக்கு சேர்க்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 53 பிஆர்க் கல்லுரிகளில் 2720 மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் ஒதுக்கீடு தரப்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு நடத்தும் நாட்டா தேர்வில் 2000 மாணவர்கள் மட்டும் தேர்வில் தகுதிபெற்றுள்ளனர் . மீதமுள்ள மாணவர்கள் ஜேஇஇ தேர்வு மூலம் அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லுரிகளில் சேர்ந்து கொள்ள அனுமதி இருந்தது.

பிஆர்கிடெக்சர் படிக்க நிர்வாக ஒதுக்கீட்டில் சேர 5லட்சம் ஆகுமென்தால் சிக்கல்

இந்த கல்வியாண்டு முதல் ஜேஇஇ தேர்வு தமிழக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்துகொள்ள அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் பி ஆர்கிடெக்சர் படிக்க ரூபாய் 5லடசம் செலவாகும் என்பதால் மாணவர்களின் பெற்றோர்கள் பிஆர்கிடெக்சர் படிப்பு படிக்க மாணவர்களின் ஜேஇஇ நுழைவு தேர்வை சேர்க்கைக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடிவெடுத்துள்ளனர். மேலும் பிஆர்க் படிப்புக்கான விண்ணப்பம் ஜூலை 6 வரை நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஜேஇஇ தேர்வு சேர்க்கை பிரச்சனையுள்ளதால் விண்ணப்ப தேதியை நீட்டிக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த தகவல்கள் :

பிஆர்க் படிப்புகளளுக்கான சேர்க்கை விவரங்கள் அண்ணா பல்கலைகழகம் வெளியீடு

 பிஆர்க் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் ஜேஇஇ புறக்கணிப்பட்டுள்ளது

English summary
here article tell about barc studies admission issues

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia