பேங்க் ஆப் பரோடா புரபேஷனரி ஆபிஸர் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க ரெடியா?

பேங்க் ஆப் பரோடாவில் உள்ள புரபேஷனரி ஆபிஸர் பணிக்கு 400 காலியிங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள புரபேஷனரி ஆபிஸர் பணிக்கு நாடுமுழுவதும் உள்ள காலிஇடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 1 மே 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

பேங்க் ஆப் பரோடா புரபேஷனரி ஆபிஸர் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க ரெடியா?

வேலையின் தன்மை -
புரபேஷனரி ஆபிஸர்

கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

வேலை இடம் - இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி -

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை பயின்றிருக்க வேண்டும். அதில் 55% மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். (எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50% மார்க் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்)

வயது வரம்பு -

20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (02.04.1989க்கு பின் பிறந்தவர்கள் மற்றும் 01.04.1997க்கு முன் பிறந்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்)

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு முறை - எழுத்துத்தேர்வு 2மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும்.

ரீசனிங் - 50 கேள்வி (50 மார்க்)

அளவு - 50 கேள்வி (50 மார்க்)

பொது விழிப்புணர்வு (வங்கி தொழில் தொடர்பான) - 50 கேள்வி (50 மார்க்)

ஆங்கில மொழி - 50 கேள்வி (50 மார்க்) மொத்தம் 200 கேள்விகள் 200 மார்க்குகளுக்கு கேட்கப்படும். இதற்கு இரண்டு மணி நேரம் கொடுக்கப்படுகிறது.

விளக்கமான வகை - (டிஸ்கிரிப்டிவ் பேப்பர் 30 நிமிடம் நடைபெறும்)

ஆங்கிலம் மொழியில் - 2 கேள்வி (50 மார்க்) கேட்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் - ரூ. 750/- பொதுப்பிரிவினரிடம் வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

முக்கிய தேதிகள் -

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் - ஏப்ரல் 1ல் இருந்து மே 1ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நுழைவுச்சீட்டு - 12.05.2017 தேதி ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நடைபெறும் நாள் - 27 மே 2017 எழுத்துத் தேர்வு நடைபெறும்.

மேலும் தகவல்களுக்கு இணைதள முகவரியை அனுகவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bank of Baroda Recruitment 2017 scheduled to hire the post of PO-Probationary officers for their branches across the country.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+