ஜிலு ஜிலு ஊரில் சட்டப் படிப்பு படிக்கப் போகலாம்...வாங்க...!!

Posted By:

பெங்களூரு: கோடையிலும் குளிராக இருக்கும் கர்நாடக மாநிலத் தலைநகரிலுள்ள பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.ஏ.எல்.எல்.பி. படிப்பு படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு பல்கலைக்கழக வளாகமான ஞானபாரதி வளாகத்தில் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. தற்போது 2016-17-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஜிலு ஜிலு ஊரில் சட்டப் படிப்பு படிக்கப் போகலாம்...வாங்க...!!

இந்தப் படிப்பில் சேர பிளஸ்-2 (அதற்கு ஈடான படிப்பு) படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 40 சதவீதம் எடுத்திருந்தால் போதுமானது.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். பின்னர் அதை பிரிண்ட் அவுட் எடுத்து கேட்புக் காசோலையை இணைத்து Principal, University Law College, Jnana Bharathi Campus, Bangalore University, Bangalore - 560 056 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பவேண்டும்.

கல்வித் தகுதி, இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

ஜூன் 15-க்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப http://www.attristech.com/BULLBAdmission/LLBIndex.aspx என்ற லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.

English summary
Applications are invited by Bangalore University to offer admission into 5 years integrated Bachelor of Arts Bachelor of Law (B.A LL.B) programme in the University Law College, Jnana Bharathi Campus, Bangalore University. Admissions are offered for the academic year 2016-17. Eligibility Criteria: Candidates must have completed pre-university course or senior +2 or equivalent (such as 11+1, 'A' level in Senior School Leaving Certificate course) from a recognised university Candidates should have secured minimum 45% in aggregate (40% for SC/ST)

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia