ஜப்பான் பவுண்டேஷனுடன் பனாரஸ் ஹிந்து பல்கலை. ஒப்பந்தம்

Posted By:

சென்னை: ஜப்பான் மொழியை பிரபலப்படுத்த பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்துடன் ஜப்பான் பவுண்டேஷன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

புதுடெல்லி ஜப்பான் பவுண்டேஷனுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்துள்ளது பனாரஸ் பல்கலை.. இந்த ஒப்பந்தத்தில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகப் பதிவாளர் கே.பி. உபாத்யாயாவும், ஜப்பான் பவுண்டேஷனின் இயக்குநர் ஜெனரல் கரு மியாமோட்டோ ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஜப்பான் பவுண்டேஷனுடன் பனாரஸ் ஹிந்து பல்கலை. ஒப்பந்தம்

இத்தகவலை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் சர்வதேச மையத் தலைவர் பேராசிரியர் எச்.பி. ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை 49 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் பனாரஸ் பல்கலைக்கழகம் செய்துள்ளது.

ஜப்பானின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெட்டீரியல் சயின்ஸ், கன்சாய் பல்கலைக்கழகம், ஷிமானே பல்கலை, கியோட்டோ பல்கலை ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது பனாரஸ் பல்கலைக்கழகம்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia