யுஜி, பிஜி படிக்க விருப்பமா....? இருக்கவே இருக்கு பனாரஸ் ஹிந்து பல்கலை.!!

Posted By:

சென்னை: யுஜி, பிஜி பட்ட, பட்டமேற்படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.

2016 கல்வியாண்டில் இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். தகுதியுள்ளவர்கள் இந்த படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

பி.ஏ, பி.காம், பி.எஸ்சி, பி.எட், எல்.எல்.பி. ஹானர்ஸ், பி.ஏ., எல்எல்பி, பி.பி.எட், பிபிஏ, எம்.ஏ., எம்.காம், எம்.எஸ்சி உள்ளிட்ட படிப்புகளை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் வழங்குகிறது.

இந்தப் படிப்புகளைப் படிக்க 2016 ஜூலை 1-ம் தேதியின்படி வயது 22-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யலாம்.

யுஜி படிப்பு விரும்புபவர்கள் யுஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதேபோல பிஜி படிப்புகளுக்கு பிஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய கடைசித் தேதி பிப்ரவரி 29 ஆகும்.

யுஇடி தேர்வுகள் ஏப்ரல் 10-ம் தேதி முதல் மே 5-ம் தேதிக்குள் நடைபெறும். பிஇடி நுழைவுத் தேர்வுகள் ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதிக்குள் நடைபெறும்.

English summary
Banaras Hindu University (BHU), Varanasi invites applications for admissions into various undergraduate and postgraduate programmes for the academic session 2016. The admissions are offered under various specialisations offered at the BHU. Age limit: Candidates should not be more than 22 years of age as on July 1, 2016. BHU Invites Applications For UG & PG Programmes How to apply: Candidates can apply online on the official website of BHU. Click here to apply. Selection procedure: UG: Candidates will be selected on the basis of their performance in the Undergraduate Entrance Test (UET 2016). PG: The selection will be done on the basis of the Postgraduate Entrance Test (PET 2016). Important dates: Last date for online submission of application forms: February 29, 2016 Date of UET- 2016: April 10 to May 5, 2016 Date of PET-2016: April 10 to June 10, 2016

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia