பிர்லா இன்ஸ்டிடியூட்டில் பி.பார்ம் படிக்க வாய்ப்பு!

Posted By:

சென்னை: பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(பிஐடி), மெஸ்ராவில் முழு நேர பி.பார்ம் படிப்பு(4 ஆண்டுகள்) படிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ள இந்த இன்ஸ்டிடியூட்டில் பி.பார்ம் படிப்பு பயில மாணவர்கள் அலைமோதுகின்றனர்.

பிர்லா இன்ஸ்டிடியூட்டில் பி.பார்ம் படிக்க வாய்ப்பு!

2015-16-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கைகளை பிர்லா இன்ஸ்டிடியூட் தொடங்கியுள்ளது.

இந்த படிப்பு பயில விரும்புபவர்கள் ஜேஇஇ(பிரதான) தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும் அல்லது. அகில இந்திய மருத்துவ நுழைவு அல்லது பல் மருத்துவ நுழைவுத் தேர்வில்(ஏஐபிஎம்டி-15) தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

மேலும் பிளஸ் 2 படிப்பில் மாணவ, மாணவிகள் ஆங்கிலம், இயற்பியல், வேதியல், கணிதம் அல்லது உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் படித்திருக்கவேண்டும்.

படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் ஸ்டேட் பாங்கில் ரூ.1,500-க்கு "Birla Institute of Technology" என்ற பெயரில் டிடி எடுத்து அனுப்பவேண்டும். மேலும் தேவைப்பட்ட விவரங்களை இணைத்து உறையிடப்பட்ட கவரில் "B Pharma 2015' எழுதி Office of Dean, Admissions & Academic Coordination, Birla Institute of Technology, Mesra, Ranchi - 835215 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

ஜேஇஇ பிரதான தேர்வு, அகில இந்திய நுழைவுத் தேர்வு, பிளஸ் 2 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் பி.பார்ம் படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆகஸ்ட் 28-க்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளின் பட்டியல் செப்டம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு பிர்லா இன்ஸ்டிடியூட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bitmesra.ac.in-ல் அறிந்துகொள்ளலாம்.

English summary
Birla Institute Technology (BIT), Mesra has invited applications for admission to 4 years full time Bachelor of Pharmacy (B.Pharm) programme for the session 2015. Eligibility Criteria: Candidates must have appeared in JEE (Main) 2015 or All India Pre-Medical/ Pre-Dental Entrance Test (AIPMT-2015)

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia