பி.எட். அட்மிஷன்: ரேங்க் பட்டியல் ரிலீஸ்!!

Posted By:

சென்னை: ஆசிரியர் பணியில் சேர உதவும் பி.எட். படிப்பில் சேர தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த கவுன்சிலிங்கை சென்னையிலுள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தவள்ளது.

பி.எட். அட்மிஷன்: ரேங்க் பட்டியல் ரிலீஸ்!!

வரும் 28-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்குக்காக 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நேற்று வெளியிட்டது.

இது குறித்து பி.எட். கவுன்சிலிங் செயலர் பாரதி கூறியதாவது:

பி.எட். சேர்க்கைக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் அண்மையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு விண்ணப்பதாரருக்குமான தனிப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டது.

இந்த தனிப்பட்ட கட்-ஆஃப் தொடர்பில் (லிங்க்) விண்ணப்ப எண்ணை மாணவர்கள் பதிவு செய்தால் தங்களுடைய ரேங்க், கட்-ஆஃப், பாடம் உள்ளிட்ட விவரங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மொத்தம் 8 நாட்கள் கவுன்சிலிங் நடைபெறும்.

கவுன்சிலிங் தேதி தொடர்பான விவரங்கள், விண்ணப்பித்தவர்களுக்கு தபாலில் அனுப்பப்பபட்டுள்ளது. மேலும் அவர்கள் இதுதொடர்பான விவரங்களை இணையதளங்களிலும் பார்த்துக்கொள்ளலாம் என்றார் அவர்.

English summary
Counselling for the B.ed Courses will start from sep 28 and ends by october 5th. The Rank list for B.ed applicants also released by the selection committee.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia