பி.எட்., எம்.எட். துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 26 கடைசி நாள்!!

Posted By:

சென்னை: பி.எட்., எம்.எட். படிப்புகள் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான துணைத் தேர்வு டிசம்பரில் நடைபெறவுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 26 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடரபாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பி.எட்., எம்.எட். துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 26 கடைசி நாள்!!

வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை www.tnteu.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதமும், செய்முறைத் தேர்வுக்கு ரூ. 600 என்ற அளவிலும் கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணத்தை "பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை' என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலையாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 26 கடைசித் தேதியாகும்.

கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அபராதத் தொகை ரூ. 150 சேர்த்து நவம்பர் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

English summary
Tamil Nadu Teachers Education University has announced B.ed., M.ed Supplementary Exam dated. The Last date for the submission of application for December 2015 Examinations Without Penalty 26.10.2015 With Penalty 05.11.2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia