தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். சேர்க்கை அறிவிப்பு!

Posted By:

சென்னை: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். படிப்புகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட்., பட்டப்படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை ஏராளமான விண்ணப்பங்களும் விற்பனையாகியுள்ளன.

இந்த நிலையில் இந்தப் படிப்பில் சேர்வதற்கு செப்டம்பர் 25 கடைசி நாள் என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகப் பதிவாளர் சே. கணேஷ்ராம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்தப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட்., பட்டப்படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்தப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் தங்களது அனைத்து மூலச் சான்றுகளுடன் செப். 25-க்குள் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தின் முதல் தவணையைச் செலுத்தி சேர்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 226720 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tanjore Tamil University has started admissions for the B.ed., M.ed courses. september 25 is the last date for the course admissions.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia