சென்னை: பி.எட். படிப்புக்கான முதல் நாள் அட்மிஷனின்போதே ஏராளமான மாணவ, மாணவிகள் திரண்டுவிட்டனர். முதல் நாள் சேர்க்கையின்போது 78 மாணவர்களுக்கு அ்டமிஷன் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் பி.எட். படிப்புகளுக்கான சேர்க்கையை சென்னையிலுள்ள விலிங்கடன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
முதல் நாள் மாணவர் சேர்க்கையை உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடக்கிவைத்தார்.
தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.
முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது. மொத்தம் ஒதுக்கப்பட்டுள்ள 98 இடங்களில் 78 மாணவ, மாணவிகளுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்குக்கு மொத்தம் 153 பேர் வந்திருந்தனர்.
இதில் மீதமுள்ள 20 இடங்களுக்கு இந்த வார இறுதியில் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது என்று என்று பி.எட். சேர்க்கை செயலர் பாரதி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












