முதல் நாளே படுஜோர்... பி.எட் விண்ணப்ப விற்பனை 3 ஆயிரத்தை தாண்டியது!

Posted By:

சென்னை: ஆசிரியர் பணியில் சேர உதவும் பி.எட். படிப்புக்கான கவுன்சிலிங் விண்ணப்ப விற்பனை முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது.

தமிழகத்தில் 2015-16-ம் கல்வியாண்டில் பி.எட்., எம்.எட் படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான கவுன்சிலிங்கை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தவுள்ளது. அநேகமாக கவுன்சிலிங் செப்டம்பர் 4-ஆவது வாரத்தில் நடைபெறலாம் எனத் தெரிகிறது.

இந்த கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் 13 மையங்களில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை "செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை 2015-16, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005' என்ற முகவரிக்கு செப்டம்பர் 11 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.

நேற்று நடைபெற்ற முதல் நாள் விற்பனையில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள 2 மையங்களில் விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன மையத்தில் மட்டும் அதிகபட்சமாக 500 விண்ணப்பங்கள் விற்பனையானது.

English summary
Counselling application for the B.ed, M.ed Courses has been started yesterday throughout tamilnadu. In the first day More than 3,000 applications sold out officials said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia