பிஎட் பட்டப்படிப்பு விண்ணப்ப விநியோகம் ஜூன் 21ந் தேதி முதல் ஆரம்பம்..!

தமிழ் நாட்டில் பிஎட் பட்டப்படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 21ந் தேதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 21ந் தேதி முதல் 30ந் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டபடிப்பை முடித்துவிட்டு அடுத்து பிஎட் படித்து ஆசிரியராகி அனைவருக்கும் வழிகாட்டியாக வழ வேண்டும் என எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்காகவே வந்து விட்டது பிஎட் அட்மிஷன்

தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு மொத்தம் 1,777 இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎட் பட்டப்படிப்பு விண்ணப்ப விநியோகம் ஜூன் 21ந் தேதி முதல் ஆரம்பம்..!

பிஎட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் பி.எட். கல்லூரி, சைதாப்பேட்டை பி.எட். கல்லூரி உள்பட 13 பி.எட். கல்லூரிகளில் ஜூன் 21ந் தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படுகின்றன. ஜூன் 30ந் தேதி வரை பிஎட் படிப்பிற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பிஎட் விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ. 500/-, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 250/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் கீழ் உள்ள முகவரியை சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

செயலாளர்,
தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018,
விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி),
காமராஜர் சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை-5

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above mentioned article about bed admission 2017 details.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+