அப்பாடி...பி.எட். அட்மிஷன் ஒரு வழியா முடிஞ்சுது!

Posted By:

சென்னை: ஆசிரியர் பணியில் சேர உதவும் பி.எட். படிப்புகளுக்கான அட்மிஷன் ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பி.எட். இடங்கள் 95 சதவீதம் நிரம்பிவிட்டதாம்.

1,777 இடங்கள்

தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்கள் உள்ளன.

அப்பாடி...பி.எட். அட்மிஷன் ஒரு வழியா முடிஞ்சுது!

விலிங்டன் சீமாட்டி

இந்த இடங்களில் 2015-16-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வந்தது.

முதல் கட்ட கவுன்சிலிங்

பி.எட். படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடந்தன.

1000 இடங்கள்

இதில் மொத்தம் 1,000 இடங்கள் நிரம்பிவிட்டன. இதைத் தொடர்ந்து மீதமுள்ள 777 இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டது.

2-ம் கட்ட கவுன்சிலிங்

அதன்படி 777 இடங்களுக்கு அக்டோபர் 14,15,16 தேதிகளில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் 650-க்கும் அதிகமான இடங்கள் நிரம்பின.

இறுதி கட்டம்

பி.எட். அட்மிஷன் தொடர்பாக பி.எட். சேர்க்கை செயலர் பாரதி கூறியதாவது:

இறுதி கட்டமான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கின் முடிவில் 95 சதவீத பி.எட். இடங்கள் நிரம்பிவிட்டன. 90 இடங்கள் வரை மட்டுமே நிரம்பாமல் உள்ளன. அந்த இடங்களை நிரப்புவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

English summary
Chennai Lady Wellington College of Education has finishes second phase of B.ed Counselling. More than 95 percentage of seats has been filled by the selection committee, official said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia