ஜூன் 19-ல் வரப் போகுது பி.இ. ரேங்க் லிஸ்ட்!

Posted By:

சென்னை: ஜூன் 19-ம் தேதி பி.இ. படிப்புகளில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவுள்ளது.

தமிழகத்தில் 580-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் இதில் அரசு இடங்கள் மட்டும் 1.80 லட்சமாகும்.

அரசு இடங்களுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

ஜூன் 19-ல் வரப் போகுது பி.இ. ரேங்க் லிஸ்ட்!

இந்த ஆண்டுக்கான கலந்தாய்வை விரைவில் தொடங்கவுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இந்த நிலையில் இன்று(ஜூன் 15) பி.இ. படிப்புகளுக்கு அப்ளை செய்துள்ள மாணவ, மாணவிகளுக்கான ரேண்டம் எண் பட்டியலை (சம வாய்ப்பு எண்) பல்கலை. வெளியிடுகிறது.

அதைத் தொடர்ந்து ஜூன் 19-ல் ரேங்க் லிஸ்ட் வெளியாகும். அப்போது எந்த மாணவர் முதலிடம், இரண்டாமிடம் என்பது தெரியவரும்.

ஜூன் 28 முதல் கலந்தாய்வு: பி.இ. படிப்பில் சேர விளையாட்டுப் பிரிவில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் ஜூன் 28-ஆம் தேதி தொடங்குகிறது.

மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும்.

English summary
Anna Uniersity, Chennai will release rank list B.E Courses on june 19 and the counselling will starts on june 28.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia