என்ஜீனியரிங் படிக்க ஆர்வமில்லை... பிகாம், பிஎஸ்சி படிக்க கடும் போட்டி...!

Posted By:

சென்னை : இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவில் அறிவியல் அல்லாத வணிகவியல் வரலாறு தொழிற்கல்வி போன்ற பாடப்பிரிவுகளில் 3 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

இவர்களில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் தொழிற்கல்வி மாணவர்கள் என்ஜீனியரிங் வேளாண் மற்றும் கால்நடை படிப்பில் சேருவர்.

அவர்களை தவிர மற்ற அனைவரும் கலை அறிவியல் கல்லூரிகளில் தான் சேர வேண்டிய நிலை உள்ளது.

என்ஜீனியரிங் மற்றும் மருத்துவம்

அதே போல் கணிதம் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற 5.94 லட்சம் பேரில் என்ஜீனியரிங் மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளில் அதிகபட்சம் மூன்று லட்சம் மாணவர்களே சேர முடியும்.

கலை அறிவியலுக்கு மவுசு

அதனால் அவர்களில் மீதமுள்ள மூன்று லட்சம் மாணவர்களையும் கலை அறிவியல் பிரிவு மாணவர்களையும் சேர்த்து ஆறு லட்சம் பேர் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர முயற்சிக்கின்றனர்.

கடும் போட்டி

ஆனால் தமிழகத்திலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் நான்கு லட்சம் இடங்களே உள்ளன. எனவே மீதமுள்ள இரண்டு லட்சம் பேரில் ஒரு தரப்பினருக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கலை அறிவியல் படிப்புகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளிலும் இடங்களை பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிக வரவேற்பு

என்ஜீனியரிங் படித்து விட்டு நிறைய பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். மருத்துவப் படிப்பிற்கும் நீட் தேர்வு வந்து விட்டதால் மாணர்கள் மருத்துவப் படிப்பில் இந்த வருடம் சேருவதும் கடினமான ஒன்றாகத்தான் உள்ளது. அதனால்தான் இந்த வருடம் கலை அறிவியல் படிப்பிற்கு அதிக வரவேற்பு உள்ளது.

English summary
Over 3 lakh students have passed courses in this year's Plus 2 examination, such as the Non-Commercial Business History Vocational School.
Please Wait while comments are loading...