பி.ஏ ஆங்கிலம் படிச்சா என்னென்ன வேலை வாய்ப்பு இருக்குன்னு தெரியுமா?.. முதல்ல இதைப் படிங்க பாஸ்!

கலை அறிவியல் படிப்பில் மாணவ மாணவியர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அதன்காரணமாக மாணவர்கள் அதிகமாக கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

சென்னை : நீட் தேர்வுக் காரணமாக மாணவ மாணவியர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனால் என்ஜீனியரிங் படிப்பிற்கும் கலந்தாய்வு தாமதமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு மற்றும் எந்த வித நுழைவுத் தேர்வும் இல்லாத கலை அறிவியல் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கலை அறிவியல் படிப்பில் குறைந்த செலவில் படிப்பை முடித்து விடலாம். மேலும் வேலை வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. மேற்படிப்பை தொடருவதும் எளிதாக இருக்கும். நடுத்தர வகுப்பில் உள்ளவர்களுக்கு மதிப்பெண்கள் இருந்தாலும் ஆனால் பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களிடம் வசதி இல்லாததால் கலை அறிவியல் படிப்பு என்பது அனைவருக்கும் படிப்பதற்கு வசதியாகவும் வேலை வாய்ப்பினை தருவதாகவும் அமைகிறது. கலை அறிவியல் படிப்பில் உள்ள கோர்ஸ்கள் பற்றி ஒவ்வொன்றாக தினமும் பார்ப்போம்.

பி.ஏ ஆங்கிலம் படிச்சா என்னென்ன வேலை வாய்ப்பு இருக்குன்னு தெரியுமா?.. முதல்ல இதைப் படிங்க பாஸ்!

1. B.A. Economics - என்பது மூன்று வருடம் படிக்கும் இளங்கலை பட்டப்படிப்பாகும். இப்படிப்பானது பொருளியல் பகுப்பாய்வு முறைகள் பற்றியும், உற்பத்தி காரணிகள் மற்றும் அவற்றின் சிறப்பியல்புகள் பற்றியும், உற்பத்திக்கான சட்டங்கள் மற்றும் காரணிகளுக்கான வருவாய்கள் பற்றியும் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.

வேலை வாய்ப்பு - Operation Manager, Executive Assistant, Data Analyst போன்ற வேலைவாய்ப்புகள் தனியார் மற்றும் அரசுத்துறையில் காணப்படுகிறது.

2. B.A. Economics with Computer Application - பொருளியல் துறையில் கணிப்பெறி பயன்பாடுகள் பற்றிய இளங்கலைப் பட்டப் படிப்பாகும். இதில் பொருளியல் பற்றிய பாடங்கள் மற்றும் பொருளியலில் கணிப்பொறியின் பயன்பாடுகள் பற்றிய பாடங்களும் கற்பிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு - Economist, Financial Service Manager, Economic Researcher, Customer Profit Analyst, Investment Analyst, Investment Administrator, Sales Analyst, Securities Analyst Trainee போன்ற வேலை வாய்ப்புகள் குவிந்துக் காணப்படுகிறது.

3. B.A. Economics with Logistics and Freight Management - என்பது பொருளியலில் தளவாடங்கள் மற்றும் சரக்கு மேலாண்மை பற்றிய மூன்றாண்டு இளங்கலைப் பட்டப் படிப்பாகும். இதில் பொருளியல் சார்ந்த பாடங்கள் மற்றும் சரக்கு மேலாண்மை செய்யும் முறைகள் பற்றிய பாடங்களும் கற்பிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு - Economist, Financial Service Manager, Economic Researcher, Customer Profit Analyst, Investment Analyst, Investment Administrator, Sales Analyst, Securities Analyst Trainee போன்ற வேலை வாய்ப்புகள் காணப்படுகிறது.

4. B.A. English (Computer Applications) - என்பது மூன்று வருடம் படிக்கும் இளங்கலை பட்டப்படிப்பாகும். இப்படிப்பானது ஆங்கில மொழியைப் பயன்படுத்தி கணினியில் மென்பொருள்களை உருவாக்குவது மற்றும் கணினியில் தகவல்களை சேமித்து வைத்தல் மற்றும் தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பது போன்றவற்றை பற்றிய பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

வேலை வாய்ப்பு - Applications Developer, Computer Operator, Senior Programmer Analyst, Senior Programmer Analyst, Office Assistant - computer Operator, Computer Application Specialist & Accounts Assistant, Computer System Analyst, Lead Consultant - Application Development போன்ற வேலைகள் உள்ளன.

5. B.A. English Language and Communication - என்பது இளங்கலை ஆங்கிலம் சார்ந்த பட்டப்படிப்பாகும். இதில் மொழியியல் மற்றும் ஆங்கில மொழியின் தத்துவப் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் ஆங்கில தொடர்பாடல் பற்றியும் கற்பிக்கப்படுகிறது. இதன் படிப்புக்காலம் மூன்றாண்டுகளாகும்.

வேலை வாய்ப்பு - Trainer - Communicative English, English Language Specialist, English Trainer போன்ற பல வேலை வாய்ப்புகள் உள்ளன.

6. B.A. English Literature - என்பது ஆங்கில மொழியின் இலக்கியம் பற்றி படிக்கக் கூடிய மூன்றாண்டு பட்டப்படிப்பாகும். இப்படிப்பு இடைக்காலத்தில் இருந்து 20ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கில இலக்கியம் மற்றும் எழுத்துகளைப் பற்றிய ஆய்வுகளை உள்ளடக்கியது. மேலும் இப்பட்டப்படிப்பில் ஆங்கில மொழியில் சிறந்த புலமைப் பெற்ற எழுத்தாளர்கள் பற்றிய பாடங்கள் போதிக்கப்படுகின்றன.

வேலை வாய்ப்பு - Translator, English Language Trainer, Copy Editor-English Literature, Subject Matter Expert-English Literature, English Content Writer, Spoken English Trainer போன்ற வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

7. B.A. Geography - என்பது இளங்கலை புவியியல் சம்பந்தமான படிப்பாகும். இளங்கலை புவியியலில் பூமி மற்றும் அதன் நிலங்களின் அம்சங்கள், குடிகள் மற்றும் நிகழ்வுகளின் ஆய்வுகளை கையாளுகின்ற அறிவியல் பாடப்பிரிவாகும். இளங்கலை புவியியல் பொதுவாக மூன்று ஆண்டுகள் படிக்கும் பாடப்பிரிவு ஆகும்.

வேல வாய்ப்பு - Agricultural Specialists, Cartographers, Demographers, Forest Managers, GIS and Remote Sensing Specialists, Regional and Urban planners, Urban planner, Climatologist, Environment Manager, Transportation Manager போன்ற வேலை வாய்ப்புகள் காணப்படுகின்றன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above article mentioned about B.A. course details and job opportunities. Do not forget to continue everyday.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X