பி.ஏ படிச்சா வேலை கிடைக்காதா.. யார் சொன்னாங்க.. முதல்ல இதைப் படிங்க பாஸ்!

கலை அறிவியல் படிப்பில் மாணவ மாணவியர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அதன்காரணமாக மாணவர்கள் அதிகமாக கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

சென்னை : நீட் தேர்வுக் காரணமாக மாணவ மாணவியர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனால் என்ஜீனியரிங் படிப்பிற்கும் கலந்தாய்வு தாமதமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு மற்றும் எந்த வித நுழைவுத் தேர்வும் இல்லாத கலை அறிவியல் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கலை அறிவியல் படிப்பில் குறைந்த செலவில் படிப்பை முடித்து விடலாம். மேலும் வேலை வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. மேற்படிப்பை தொடருவதும் எளிதாக இருக்கும். நடுத்தர வகுப்பில் உள்ளவர்களுக்கு மதிப்பெண்கள் இருந்தாலும் ஆனால் பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களிடம் வசதி இல்லாததால் கலை அறிவியல் படிப்பு என்பது அனைவருக்கும் படிப்பதற்கு வசதியாகவும் வேலை வாய்ப்பினை தருவதாகவும் அமைகிறது. கலை அறிவியல் படிப்பில் உள்ள கோர்ஸ்கள் பற்றி ஒவ்வொன்றாக தினமும் பார்ப்போம்.

பி.ஏ படிச்சா வேலை கிடைக்காதா.. யார் சொன்னாங்க.. முதல்ல இதைப் படிங்க பாஸ்!

1. B.A. Ancient Indian History, culture & Archaelogy - என்பது இளங்கலை வரலாறு சம்பந்தமமான படிப்பாகும். இதில் இந்தியாவின் பண்டைய கலாச்சாரம், கருத்துக்கள் அறிவு மற்றும் வாழ்க்கை முறை, பண்டைய பொரளாதார வரலாறு, பண்பாடு, தெய்வ வழிபாடு போன்ற பல்வேறு தகவல்களை பற்றி கற்றுத்தரப்படுகிறது.

வேலை வாய்ப்பு - libraries and historic sites, information manager, librarian, Manager-National parks and historic sites, online search specialist, research assistant போன்ற வேலை வாய்ப்புக்கள் உங்களுக்காக காத்திருக்கிறது.

2. B.A. Business Administration - இப்படிப்பில் வணிக நிர்வாகம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை மார்கெட்டிங் செய்தல் மற்றும் திட்டமிட்டு செயல்படுதலை பற்றி கற்றுத் தரப்படுகிறது.

வேலை வாய்ப்பு - Business Administrator, Manager, Marketing Manager போன்ற வேலை வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது. எந்த துறையை எடுத்தாலும் Marketing manager கண்டிப்பாக தேவை. ஆதலால் இதில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.

3. B.A. Business Economics - வியாபார பொருளியல் பற்றிய வணிகவியல் பட்டப் படிப்பாகும். இதில் பயன்பாட்டுப் பொருளாதாரம், மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்பு கொள்வதற்கு தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் வணிகச் சூழல் மற்றும் நிறுவனத்தின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவற்றை சரிசெய்து சிறப்பாக நிர்வாகத்தினை மேற்கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றியும் போதிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு - Business manager-analytics, Business Analyst, Economics Business Analyst, Manager-Medical Economics, Business Finance-Business Economics Associate, Economics business Manager, Business Analyst-Deployment economics, Analyst-business planning&Finance, Sr.Analyst-Business Analytics, Marketing, sales, Business Develpoment Executive போன்ற ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

4. B.A. Co-operative Studies - என்பது கூட்டுறவு ஆய்வுகள் பற்றிய பாடமாகும். இது மூன்றாண்டு இளங்கலை பட்டப் படிப்பாகும். இதில் மாணவர்களுக்கு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறைகளில் அனைத்து மாவட்டங்களிலும் சிறந்தவர்களாக விளங்க பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு - Manager co-operative bank, Manager - credit union, clerk, customer service advisor, Assistant Manager / Junior officer, Executive Assistant, Helper போன்ற வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

5. B.A. Corporate Economics - என்பது பெருநிறுவன பொருளியல் பற்றிய இங்கலைப் பட்டப் படிப்பாகும். இதில் மாணவர்கள் வணிகச் சூல் மற்றும் பெருநிறுவனத்தின் செய்லமுறைகளைப் புரிந்து கொண்டு அவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை திறம்பட கையாளும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேலாண்மை செய்தல், கணக்கியல், பொருளாதார கோட்பாடுகள் பற்றிய பாடங்களும் கற்பிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு - Economic Analyst, Market Researcher, Marketing Personnel, Central bank Economist, Accountant, Human Resource Personnel, Strategy planner-Corporate Planning போன்ற வேலை வாய்ப்புகளை பொருளியல் படிப்புத் தருகிறது.

6. B.A. Corporate Secrataryship - என்பது இளங்கலை பட்டப்படிப்பு. பெருநிறுவன செகரட்டரிஷிப் குறிப்பாக சட்ட ஒழுங்கு ரீதியான இணக்கம் உறுதி மற்றும் இயக்குனர்கள் குழு முடிவுகளை நடைமுறைப்படுத்தப்படுகின்ற உறுதி தொடர்பாக ஒரு நிர்வாகத்தை நடத்த பயில்கின்ற படிப்பு ஆகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் நிறுவன செயல்பாட்டு தொடர்பான நடவடிக்கைகள் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும்.

வேலை வாய்ப்பு - Corporate counsel & corporate secretary, corporate legal secretary, அனைத்து பெரு நிறுவனங்களிலும் நிர்வாகத் திறமை என்பது முக்கியமான ஒன்றாகும். நிர்வாகத் திறமையை வளர்க்க உதவும் இந்த படிப்பு வேலை வாய்ப்புகளையும் அள்ளித் தருகிறது.

7. B.A. Defence & Strategic Studies - என்பது பகுதி ஆய்வுகள், அணுசக்தி கொள்கைகள் மற்றும் இராணுவ புவியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பாதகாப்பு பொருளியல், சர்வேதச சட்டம், சர்வதேச உறவுகள் பற்றிய ஆய்வுகளை உள்ளடக்கியது. பொதுவாக நம் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் அனைத்து உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய படிப்பாகும். இப்படிப்பு பொதுமக்கள் மத்தியில் தேசிய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

வேலை வாய்ப்பு - Hardware & Systems Professional (Avionics/Defence), Delivery Head-Defence, Sales Manager-Defence Industry, Quality Inspector-Leading Defence/Aerospace client, Manager-Project Civil-Defence, Environmental Business Embedded systems Architect - Defence Practice, Regional Service Manager - Defence Vehicles, Associate partner - Defence channel, personal security officer - Ex - Defence, Account Manager-Army/Navy/Defence போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு குவிந்துக் காணப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above article mentioned about B.A. course details and job opportunities. Do not forget to continue everyday.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X