சாஃப்ட்வேர் மன்னனின் பல்கலை.யில் பட்டப்படிப்புகள் படிக்கலாம்....!!

Posted By:

டெல்லி: பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள் படிக்க அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இந்திய சாஃப்ட்வேர் மன்னர் என்று அழைக்கப்படும் அஜிம் பிரேம்ஜி உருவாக்கியுள்ள மிகப்பெரிய நிறுவனம் விப்ரோ. இந்த நிறுவனம் நாடு முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நிறுவனங்களைத் தொடங்கி சாஃப்ட்வேர் உலகில் வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது. அதனால் இந்தியாவின் சாஃப்ட்வேர் மன்னர் என்று அஜிம் பிரேம்ஜி அழைக்கப்படுகிறார்.

சாஃப்ட்வேர் மன்னனின் பல்கலை.யில் பட்டப்படிப்புகள் படிக்கலாம்....!!

இந்தப் பல்கலைக்கழகத்தில் தற்போது படிப்புகளுக்கான விண்ணப்ப விற்பனை தொடங்கியுள்ளது. பி.எஸ்சி, எல்.எல்.எம். பி.ஏ., பி.ஜி. படிப்புகள் ஆகியவற்றுக்கு விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்துக்கு அனுப்பலாம்.

விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக மட்டுமே அனுப்பவேண்டும். இதற்காக ரூ.250-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும். கட்டணத்தையும் ஆன்-லைன் மூலமாகவே செலுத்தவேண்டும். பின்னர் விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்து, கட்டணச் சலானையும் இணைத்து தபால் மூலம் Admissions Cell, Azim Premji University, PES Campus, Pixel Park, B Block, Electronics City, Hosur Road, Bengaluru - 560100 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் மாணவ, மாணவிகள் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவர்.

ஏப்ரல் 25-ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பங்களைச் செலுத்தலாம். இதற்கான நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும். நேர்முகத் தேர்வுகள் மே மாத மத்தியில் நடைபெறும். சேர்க்கை ஜூனில் தொடங்கும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.azimpremjiuniversity.edu.in/SitePages/admissions-programme-apply.aspx என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Azim Premji University, Bangalore has invited applications for admissions into its undergraduate and postgraduate programmes for the academic sessions 2016. Notification has been released by the Azim Premji University for admissions into the following programmes: Programmes offered are: Bachelor of Arts (B.Sc) Bachelor of Science (B.Sc) offered in Physics or Biology, Economics, Humanities Master of Laws (LL.M) in Law and Development Interested candidates can read through details on eligibility criteria, selection procedure, application procedure and important dates. Eligibility: For UG programmes: Candidates should have passed Class 12 or equivalent with 50% marks from a recognised board of education. Candidates who will take up their final examinations in June 2016 are also eligible. For LL.M programme: Candidates should have a bachelor's degree in Law (LL.B. 3 years/5 years) from a recognised college/university.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia