ஆந்திரா பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வுக்கான பதிவுகள் தொடக்கம்!!

Posted By:

ஹைதராபாத்: ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சேர விரும்பு மாணவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வுகள் பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன.

இந்தப் பதிவை செய்பவர்கள் மட்டுமே இந்த நுழைவுத் தேர்வை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வுக்கான பதிவுகள் தொடக்கம்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆந்திரா பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது. மேலும் ஸ்ரீகாகுளத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்திலும் இந்த நுழைவுத் தேர்வு மூலம் சேர முடியும். இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளில் சேர முடியும்.

நுழைவுத் தேர்வு எழுத பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. ஏப்ரல் 18-ல் இது நிறைவடையும்.

இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும். எஸ்பிஐ, ஆந்திரா வங்கி மூலம் இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

ஏப்ரல் 25-ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பத்தைச் செலுத்தலாம். ஆனால் அபராதம் உண்டு. ஹால் டிக்கெட்டுகளை மே 2-ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ளலாம். தேர்வுகள் மே 5-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு http://www.andhrauniversity.edu.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
The process for online registrations of Andhra University Common Entrance Test (AUCET) has begun. AUCET 2016 will be held by the Andhra Univeristy for admissions into severl programmes offered at the following campuses: Andhra University campus, Visakhapatnam, Dr. B.R. Ambedkar University (BRAU), Srikakulam, P.G. Centres and affiliated colleges of BRAU & AU offering PG programmes. Porgrammes offered are: Arts, Science, Engineering, Law. The registrations process for AUCET 2016 has begun and will end on April 18, 2016. Read through for application procedure, applicaition fee,

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia