ஏ.பி.ஆர்.ஓ., டைரக்ட் அப்பாயின்மென்ட் கட்...!

இனி நாங்க ஹாப்பி...! என, நீங்க காது பட பேசுவது கேட்டுச்சுங்க...! உங்களின் சந்தோஷத்துக்கு காரணம் எனக்கும் தெரியும்... தெரியாத யூத்ஸ்க்கு நாம தெரிவிக்கனும்ல...!

ஓகே விஷயத்துக்கு வர்றேன்; தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறையில், ஏ.பி.ஆர்.ஓ., என அழைக்கப்படும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள், இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரப்பப்படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஏ.பி.ஆர்.ஓ., நேரடி நியமனம் ரத்து...!

தமிழ்நாடு பொது சார்நிலை பணி தொகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்ட இந்த அலுவலர் பதவி, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டது.

தற்போது தற்காலிக விதிகளின் படி, நேரடி நியமனம், பணி மாறுதல் வாயிலாக நியமனம், பதவி உயர்வின் வாயிலாக நியமனம் ஆகிய மூன்று வழிகளில் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது நாள் வரை ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) வாயிலாக நியமனங்கள் செய்ய, தமிழ்நாடு அரசு முடிவெடுத்துளளது.

பத்திரிக்கை, சினிமா, விளம்பரம், மக்கள் தொடர்பு ஆகிய படிப்புகளில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என, நிர்ணயித்துள்ளது.

அரசின் திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ளச் செய்தல், படக்காட்சிகள் நடத்தப்படும் இடங்களில் அரசின் திட்டங்கள் சாதனைகள் குறித்த விவரங்களை பொது மக்கள் தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில், விளக்கமாக எடுத்துக் கூறுதல், அரசு வெளியிடும் செய்திகளை உடனுக்குடன் மக்கள் அறியும் வண்ணம் சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தல், ஆகிய முக்கியப் பணிகள் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விளம்பரம் பணியிடங்களை நிரப்புவதற்கு, அவ்வப்போது தற்காலிக விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்தற்காலிக விதிகளின்படி நியமனங்கள் கீழ்க்காணும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

· நேரடி நியமனம் (Direct Recruitment)

· பணிமாறுதல் மூலம் நியமணம் (Recruitment by Transfer)

· பதவி உயர்வின் மூலம் நியமனம் (by Promotion)

தற்போதைய காலத்தேவை, சமூக ஊடகத்தின் வீச்சு, நவீன தொழில்நுட்பக்களுக்கேற்ப மக்கள் தொடர்பு மற்றும் களவிளம்பரங்கள் செய்யப்பட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றின் அடிப்படையில், நேரடி நியமனத்திற்கான அடிப்படை தகுதிகளை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் அறிக்கை மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் கல்வித் தகுதியினை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏ.பி.ஆர்.ஓ., நேரடி நியமனம் ரத்து...!

இனி நேரடி நியமனம் கட்

நேரடி நியமன முறையில் நியமனம் செய்யப்படும் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியமளர் தேர்வாணையத்தின் அகப்பாட்டு எல்லைக்குள் கொண்டுவந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நியமனம் செய்யலாம் என கருதி, அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்)காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு/பணிமாறுதல் இடையே 1:1 என்ற விகிதாச்சாரத்தில் நிரப்பப்பட வேண்டும்.

(50% நேரடி நியமனம் 50% பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல்)
என, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
ஹாப்பி... இளைஞர்களே...? அரசியல் தொடர்பு இருந்தால் தான் ஏ.பி.ஆர்.

ஓ., ஆக முடியும் என்கிற கருத்தை உடைத்து, உரிய தகுதி, திறமை இருந்தால் அரசு இயந்திரத்தின் முக்கிய துறையிலும் நுழைய முடியும் என, அறிவித்து யூத்ஸ் ஹாட்டில் இடம்பிடித்துள்ளார் தானே நம்ம முதல்வர்?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The direct recruitment system has been canceled for the posts of Assistant Public Relations Officer, also known as APRO, in the Tamil Nadu News Public Relations Department.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X