உதவி தொடக்க கல்வி அலுவலராக வேண்டுமா.. 5 பரீட்சையைத் தாண்டனும்!

Posted By:

சென்னை : ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதல் பெற முடியும் என தொடக்கக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பணி மாறுதல் பெற முடியும்.

உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதல் பெற ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களால் மட்டும்தான் முடியும். மற்றவர்கள் பணி மாறுதல் பெற முடியாது.

5 தேர்வுகளில் தேர்ச்சி

பள்ளி துணை ஆய்வாளர், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு, மாவட்ட அலுவலக நடைமுறை உள்ளிட்ட 5 துறை மற்றும் சிறப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணி மாறுதல் பெற முடியும்.

சீனியாரிட்டி பட்டியல்

அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் சீனியாரிட்டி படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. தற்போது 2017க்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில சீனியாரிட்டி பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது.

மாவட்ட வாரியாக பரிந்துரை

இந்தப் பட்டியலில் 2010 டிச.31 வரை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான பரிந்துரைகளை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் இயக்குனரகத்திற்கு அனுப்ப உள்ளனர்.

குற்ற வழக்குகள் இருக்கக் கூடாது

பட்டியலில் இடம் பெறுவோர் 2016 டிசம்பர் 31க்குள் பள்ளி துணை ஆய்வாளர், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு, மாவட்ட அலுவலக நடைமுறை உள்ளிட்ட 5 துறை மற்றும் சிறப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அன்றைய தேதியில் 57 வயது பூர்த்தி அடைந்தோராக இருக்க கூடாது. குற்றவழக்குகள் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்க கூடாது என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடக்கக் கல்வித்துறை எச்சரிக்கை

இந்த 5 தேர்வுகளில் தேர்ச்சி பெறாதோரை பரிந்துரை செய்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை எச்சரித்துள்ளது. தகுதியானவர்களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்பதில் தொடக்க கல்வித்துறை உறுதியாக உள்ளது.

English summary
Primary education department has announced that Assistant Initial Educational Officers should pass 5 exams. Others can not get a job change.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia