வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள்...!

Posted By:

கோவை : கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள 206 உதவி வேளாண் அதிகாரி பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மே 22ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி / எஸ்டி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டு பிரிவினரக்கு அதிகபட்ச வயது நிர்ணய கட்டுப்பாடு கிடையாது.

வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள்...!

கல்வித்தகுதி

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது அவசியம். இதற்குப் பின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ அக்ரிகல்சர் அல்லது ஹர்டிகல்சர் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு, நேர்க்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல்தாள் டிப்ளமோ அக்ரிகல்சர் / ஹர்டிகல்சர் தகுதிக்கு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இரண்டாவது தாளில் பிளஸ்2 தகுதிக்கு பொது அறிவு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடக்கும். தேர்வு இரண்டரை மணி நேரம் நடக்கும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் 50 மதிப்பெண்களுக்கு நடக்கும்.

தேர்வு நடைபெறும் இடம்

எழுத்துத் தேர்வு கோவை, மதுரை, திருச்சி, பெரியகுளம், கிள்ளிக்குளம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 750/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22 மே 2017

மேலும் விபரங்களுக்கு http://14.139.13.70/Reports/Information%20brochure.pdf என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
206 Assistant Agricultural Officers in Coimbatore Agricultural University will be eligible to apply till May 22.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia